பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருப்பதிகப் பொருட்பாகுபாடு

தேவாரத் திருப்பதிகங்களில் அறிவுறுத்தப்பெறும் பொருள்களைப்பற்றிச் சிவநெறிச் செல்வர் பலர் பல வகையாகப் பகுத்துச் சிந்தித்துள்ளார்கள். மூவர் அருளிய திருப்பதிகங்கள் முழுவதனையும் ஒதி மகிழ விரும்பிய சிவாலய முனிவர்க்குப் பொதியில் முனிவ ராகிய அகத்தியர், மூவர் தேவாரங்களிலிருந்து இருபத்தைந்து திருப்பதிகங்களைத் திரட்டித்தந்து, அத்திருப்பதிகங்களை நாள் தோறும் பாராயணஞ் செய்வோர் அடங்கன்முறை முழுவதையும் ஒதிய பயனப் பெறுவர் என அறிவுறுத்தி மறைந்தருளினார் என்றதொரு வரலாறு, செவிவழிச் செய்தியாக வழங்கப் பெற்று வருகிறது. அகத்திய முனிவர், சிவாலய முனிவர் பொருட்டுத் திரட்டித்தந்த தேவாரப் பதிகங்கள் இருபத்தைந்தும் அகத்தியர் தேவாரத்திரட்டு என்ற பெயருடன் பாராயணம் செய்யப்பெற்று வருதலைப் பலரும் அறிவர்.

அகத்தியர் தேவாரத் திரட்டில், குருவருள், திருவெண்ணிறு (பரையின் வரலாறு), அஞ்செழுத் துண்மை, கோயிற்றிறம், சிவனுருவம், திருவடி, அருச்சனை, அடிமை நிலை என்னும் எண்வகைப் பொருட்பகுதிகள், திருப்பதிகங்களின் திருவுள்ளக் கிடையாக அமைந்திருத்தல் காணலாம். இப்பொருட் பகுதிகள் எட்டும்,

குருவருளும் வெண்ணிறெழுத்தஞ்சுங் கோயில் அரனுருவும் என்றலைமே லாக்கும் - திருவடியும் சிட்டான அர்ச்சனையும் தொண்டும் சிவாலயர்க்கென் றிட்டார் அகத்தியனார் எட்டு

என வரும் வெண்பாவிற் குறிக்கப்பெற்றன. அகத்தியத் தேவாரத்திரட்டின் பாயிரமாக அமைந்தது.