பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756

பன்னிரு திருமுறை வரலாறு


அகத்தியத் தேவாரத்திரட்டினேப் போல் தனித் தனிப் பதிகங்களாகத் தொகுக்கப்படாமல், சைவசித் தாந்தச் செம்பொருட்டுணியினே இனிது விளக்கும் குறிப்புடைய தனித் தனிப்பாடல்களாக உமாபதி சிவா சாரியாரால் தொகுக்கப்பெற்றது, திருமுறைத்திரட்டு’ என்பதாகும். இது, திருவருட்பயன், சிவப்பிரகாசம் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்களே இயற்றும் நிலையில், தாம் கூற எடுத்துக்கொண்ட நுண் பொருளுக்கு அரண் செய்யும் முறையில் முன்னுால் சான்ருக உமாபதி சிவாசாரியாரால் தொகுத்துணர்த் தப் பெற்ற தனிச் சிறப்புடையதாகும். இச் செய்தி,

' தேசுமிகும் அருட்பயின்ற சிவப்பிரகாசத்தில்

திருந்து பொதுச் சங்கற்ப நிராகரனந் திருத்தி

ஆசிலருள் விகுவெண்பாச் சார்பு நூலால்

அருளெளிதிற் குறிகூட அளித்து ஞானப்

பூசைதக்க காரணமுன் புகன்ற தனிற் புரிந்து

புணர்விக்கச் சிவஞான போதசித்தி வழிநூல்

மாசில் சதமணிக் கோவை முன்னுரல் சான்று.

மருவு திருமுதைத்திரட்டு வைத்தன ன்

மன்னுயிர்க்கே ’’

எனவரும் ஞான தீக்கைத் திருவிருத்தத்தால் நன்கு விளங்கும்.

உமாபதி சிவாசாரியாரால் தொகுக்கப் பெற்ற இத்திருமுறைத் திரட்டில், மூவரருளிய தேவாரத் திரு முறைகளிலிருந்து தொண்ணுாற்ருென்பது திருப்பாடல் கள் தொகுக்கப் பெற்றுள்ளன. அத்திருப்பாடல்களே (1) பதிமுதுநிலை, (2) உயிரவை நிலே, (3) இருண் மலநிலே, (4) அருளது நிலே, (5) அருளுரு நிலே, (6) அறியும்நெறி, (7) உயிர் விளக்கம், (8) இன்புறு நிலை, (9) அஞ்செழுத்தருள் நிலை, (10) அனேந்தோர் தன்மை எனப் பத்து அதிகாரங்களாக உமாபதி சிவா