பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகப் பொருட்பாகுபாடு 757.

சாரியார் பகுத்துள்ளார். இப்பத்துத் தலைப்புகளும் அவ்வாசிரியர் இயற்றிய திருவருட்பயன் என்ற நூலிலும் அமைந்திருத்தல் காணலாம். எனவே திரு வருட் பயன் என்பது, அருள் நூலாகிய தேவாரத் திரு முறையின் பயணுகிய சைவசித்தாந்த உண்மை களேச் சுருங்க விளக்கும் நோக்கத்துடன் இயற்றப் பெற்ற சிந்தாந்த சாத்திரமென்பது நன்கு தெளியப் படும்.

தேவாரத் திருப்பதிகங்களில் அறிவுறுத்தப்பெறும் நற்பொருள்களே நாடோறும் சிந்திக்கும் முறையில் தொகுக்கப் பெற்றுள்ள அகத்தியர் தேவாரத்திரட்டு, உமாபதி சிவாசாரியார் திருமுறைத்திரட்டு என்னும் இத்தொகுப்பு நூல்களின் அமைப்பினே க் கூர்ந்து நோக்குங்க ல், நம் முன்னேர்கள் தேவாரத் திருப்பதி கப்பொருள் நலங்களேக் குருவகள் முதலிய எட்டு வகை யானும் பதிமுது நிலே முதலிய எட்டிறந்த பலவகை யானும் பகுத்து * ஆராய்ந்துள்ளார்கள் என்பது நன்கு புலனுகின்றது.

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் ஆகிய மெய்ந் நூல்களும், சைவசித்தாந்தத் தமிழ் முதல் நூலாக ஆசிரியர் மெய்கண்ட தேவர் இயற்றிய சிவஞானபோதமும், அதன் வழி நூலாக அருணந்தி சிவா சாரியார் இயற்றிய சிவஞான சித்தியாரும், இருபா இருபஃதும், அதன் சார்பு நூலாக உமாபதி சிவா சாரி யார் இயற்றிய சிவப்பிரகாசம் முதலிய எட்டுநூல்களும் தேவாரத் திருப்பதிகங்கள் திருவாசகம் முதலிய

  • தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் சூத்திரம் இளம்

பூரணர் நச்சிளுர்க்கினியர் உரை நோக்குக.