பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சங்கநாற் குறிப்புக்கன்

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார ஆசிரியர்கள் மூவரும், முற்காலத்திற் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரை நகரத்தே நிலவித் தமிழ் வளர்த்த தமிழ்ச் சங்கத்தைப் பற்றியும், அச் சங்கத்தே தமிழாராய்ந்த ஆலவாயில் அவிர் சடைக் கடவுளாகிய இறையனர் முதலிய சங்கப் புலவர்கள் பாடிய சங்கச் செய்யுட்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார்கள்.

திருஞான சம்பந்தப் பிள்ளையார், மதுரையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கத்தைக் கழகம்’ எனவும்,

மதுரைத் தொகை எனவும் குறித்துள்ளார்.

அங்கழகச் சுதை மாடக் கூடல் ஆலவாய் 11-7-2) அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை ஆக்கினுலும்

(திருப்பாசுரம்)

என வரும் தொடர்கள் இங்கு நோக்கத்தக்கன.

மதுரைத் திருவாலவாயில் எழுந்தருளியுள்ள சிவ பெருமான், தன்னே அன்பினுல் வழிபட்ட பிரமசாரி யாகிய தருமி என்னும் அந்தணன் பொருட்டுக் கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் செய்யு ளேப் பாடிக் கொடுத்ததோடு அமையாது, அச்செய்யுள் குற்றமற்றதெனச் சங்கப் புலவர் முன் வாதிட்டுத் தருமிக்குப் பொற்கிழி வாங்கி அளித்தார் என்பது வரலாறு. இச்செய்தியினே,

  • மின்காட்டுங் கொடி மருங்குல் உமையாட்கு என்றும்

விருப்பவன் காண் பொருப்புவலிச் சிலேக்

கையோன் இாண் நன்பாட்டுப் புலவஞய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினேன் காண் ’