பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760

பன்னிரு திருமுறை வரலாறு


என வரும் திருப்புத்துார்த் திருத்தாண்டகத்தில் அப்பர் அடிகள் குறித்துள்ளார்.

இவ்வாறு திருவாலவாயில் எழுந்தருளிய இறை வனே மதுரையில் சங்கப் புலவர்கட்கெல்லாம் தலைமைப் புலவராக விளங்கிய திறத்தை,

தண்டமிழ் நூற் புலவாணர்க் கோர் அம்மானே

[7–34–2]

என வரும் தொடரால் நம்பியாரூரர் குறித்துள்ளார்.

இறைவனத் தலைவகுகக்கொண்டு விளங்கிய பரணர், கபிலர் முதலிய சங்கப் புலவர்கள் அனே வரும், நிலேயற்ற பொய்யாய செல்வத்திற்கு அடிமைப்படா மல், என்றும் நிலைத்த மெய்ப்பொருளாகிய இறைவனது திருவடிக்கே தொண்டுபட்டுத் தம் புலமைத் திறத்தால் சிறந்த பல செய்யுட்களைப் பாடிய பெரும் புலவர்கள் ஆதலால் தண்டமிழ்ப் புலவாணர்களாகிய அப்பெரு மக்களே,

பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்

எனத் திருத்தொண்டத் தொகையில் பரவிப் போற்று வர் சுந்தரர் .

திரிபுரம் எரித்த உமையொரு பாகணுகிய சிவ பெருமானே,

  • உமை யமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் ”

|திருமுருகாற்றுப்படை}

என போற்றினர் நக்கீரர். இத்தொடர்ப்பொருளே அடி யொற்றியது,