பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

பன்னிரு திருமுறை வரலாறு


சைவத்திருமுறை பன்னிரண்டனுள் முதல் மூன்று திருமுறைகளைத் திருவாய்மலர்ந்தருளிய அருளாசிரி யர் ஆளுடைய பிள்ளே யாராகிய திருஞானசம்பந்த ராவர். கொன்றை மலர் மாலையை யணிந்த சிவ பெருமான் திருவடிகளே யன் றிப் பிறிகொன்றையுங் கருதாத ஒரு நெறிய மனமுடையார் திருஞான சம்பந்தப் பிள்ளேயாரென்பது,

' வம்பரு வரிவண்டு மண நாற மலரும்

மதுமலர்நற் கொன்றையான் அடியலாற்பேணு

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்”

என வரும் திருதொண்டத் தொகையால் இனிது புலம்ை. திருத்தொண்டத் தொகையின் வகையாகத் திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பி, தாம்பாடிய ஆளுடைய பிள்ளேயார் திருவந்தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக் கோவை, திரு வுலா மாலே, திருக்கலம்பகம், திருத்தெர் கை என்னும் ஆறு: பிரபந்தங்களிலும் திருஞானசம்பந்தரது வரலாற்று நிகழ்ச்சிகளே ஆங்காங்கே குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். சேக்கிழாரடி கள் திருத்தொண்ட த் தொகையின் விரியாகத் தாம் பாடிய திருத்தொண்டர் புராணத்துள் திருஞானசம்பந்தப் பிள்ளே யார் வரலாற் றினே 1256 செய்யுட்களால் திருஞான சம்பந்தர் புராணமாக விரித்துக்கூறியுள்ளார். திருத்தொண்ட த் தொகையாற் போற்றப்பெறும் அடியார்களின் வரலாறு களே விரித்துரைப்பதாகிய இத் திருத்தொண்டர் புராணம், 4286 செய்யுட்களேயுடையதாகும். இதன் கண் திருஞானசம்பந்தர் வரலாருென்று மே 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பெற்றுளது. இது நோக்கியே பிள்ளே பாதி புராணம் பாதி’ என்னும் பழமொழியும் வழங்கப்பெறுவதாயிற்று.