பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கநூற் குறிப்புக்கள் 763

எனச் சுந்தரரும் செருந்திமலரைப் பற்றிக் கூறும் தொடர்கள் இங்கே நோக்கத் தக்கனவாம்.

வேதங்களே ஒதும் அந்தணர்கள் நெருங்கி வாழும் ஊர்களில், அவர்கள் ஒதிய வேதத்தின் ஒசையைக் கேட்டுப் பழகிய வளைந்த வாயினேயுடைய கிளிகள், அவ் வேதங்களே அவற்றின் ஒசை கெடாது மிழற்றும் ஆற்றல் பெற்றமையால் அவை மாணுக்கர்கட்கு வேதங்களேக் கற்பிக்கும் ஆசிரிய நிலையில் விளங்கின என உயர்த்துப் போற்றுவதாக அமைந்தது,

“ வாேவாய்க்கிள்ளே மறை விளிபயிற்றும்

மறை காப்பாளர் உறைபதி " [300-1}

என வரும் பெரும்பாணுற்றுப் படைத் தொடராகும். வேதியர் நிறைந்து வாழும் திருவீழிமிழலேயைச் சிறப் பிக்கக் கருதிய ஞானசம்பந்தப் பிள்ளேயார்,

“ பாரிசையும் பண்டிதர்கள் பன்னளும் பயின் ருேதும் ஒசை கேட்டு வேரி மலிபொழிற் கிள்ளே வேதங்கள்

பொருட்சொல்லும் மிழலையாமே" (1-182-1}

என இத்தொடர்ப் பொருளே அடியொற்றிப் பாடிப் போற்றியிருத்தல் உணர்ந்து மகிழத்தக்கதாகும்.

பகற் பொழுதிலே பெய்தலே உடைய மழை கால் இறங்கில்ை ஒத்த பெரிய அடியினே உடையது கமுக மரம் என்பது,

மழை வீழ்ந்தன்ன மாத்தாட் கமுகின்’ [363]

எனவரும் பெரும்பாற்ைறுப்படைத் தொடரிற் குறிக்கப் பட்டது. இவ்வாறே,

மேகம் ஏய்க்கும் இளங்கமுகம் ” [2–74-5]

என் ருர் சம்பந்தரும்.