பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/785

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

768

பன்னிரு திருமுறை வரலாறு


மதிசேர்ந்த மகவெண் மீன் உருகெழுதிறல் உயர் கோட்டத்து முருகமர்பூ முரண் கிடக்கை வரியணிசுடர் வான் பொய்கை’

(பட்டினப்பாலே 35.38)

என்ற தொடரில் நிறைமதியும் மீனும் பொய்கைக்கும் கரைக்கும் உவமையாகக் குறிப்பிடப்பட்டன. இவ்வுவ மையை அடியொற்றிப் பிறைமதியை ஏ ரி யி ன் கரைக்கு உவமையாக நாவுக்கரசர் எடுத்தாண் டுள்ளார்.

  • வாரிவளாய வருபுனற் கங்கை சடைமறைவாய்

எரிவளாவிக் கிடந்தது போலும் இளம்பிறையே

(4-118-9)

என்பது திருவிருத்தம்.

பேரிசை நவிரமே ஏயுறையுங் காரியுண்டிக் கடவுள்' (82-83)

எனச் சிவபெருமானே மலைபடு கடாம் என்ற சங்கப் பாட்டு, பரவிப் போற்றியுள்ளது.

ஒருங்களி நீ இறைவா என்று உம்பர்கள்

ஒலமிடக்கண்டு இருங்களமார விடத்தை இன்னமுது உண்ணிய ஈசர்’

(1-48-4)

என்ருங்குவரும் தேவாரப் பாடல்களில் இறைவன் நஞ்சுண்ட திறம் விரித்துரைக்கப் பெற்றுள்ளது.

குரங்குகளின் இனமாகிய கருவிரலூகம், மூங்கில் வளர்ந்த மலேச்சாரலில் விளையாடும் இயல்பு,

‘கவனுமிழ் கடுங்கல் இருவெதிரீர்ங் கழை தத்திக் கல்எனக் கருவிரலுகம் பார்ப்போடு இரிய (206-8)