பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/793

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776

பன்னிரு திருமுறை வரலாறு


திசையில் திருநல்லூர் என்னும் தலம் இறைவனுக்கு உவப்பாகிய பெருமையுடன் திகழ்கின்றது என அறி வுறுத்தும் முறையில் அமைந்தது,

படவேர் அரவல்குற் பாவை நல்லீர்பகலே யொருவர் இடுவார் இடைப்பலிகொள்பவர் போலவந்து இல்புகுந்து தடவாரடிகள் நடம் பயின் ருடிய கூத்தர்கொலோ வடபாற்கயிலையுந் தென்பால் நல்லுருந்தம் வாழ்பதியே.

(4-97-3 என்ற திருவிருத்தம் ஆகும்.

காமப்பகுதி கடவுளும் வரையார்

ஏளுேர் பாங்கினும் என்மகுர் புலவர்

என வரும் தொல்காப்பியப் புறத்தினே இயற்குத்திரம், தனக்குவமையில்லாத இ ைற வனத் தலைவனுகக் கொண்டு தேவரும் மக்களுமாகிய உயிர்கள் அன்பினுற் காமுற்று வாழும் ஒழுகலாற்றைக் குறிப்பதாகும். இக் குறிப்பினே அடிப்படையாகக் கொண்டு சங்க இலக் கியங்களில் விரித்துரைக்கப்படும் அகப்பொருட்டுறை அமையப் பாடிய அகத்துறைப் பாடல்கள் மூவர் தேவாரத்தும் அமைந்திருத்தல் காணலாம்.

த லேமகனது பெரும்புகழ் கேட்டுத் தலைவி மகிழும் நிலையில் ஏற்படும் மெய்ப்பாட்டினே உறுபெயர் கேட்ட ல் எனத் தொல்காப்பியர் குறித்துள்ளார். இம்மெய்ப்பாட்டினே அடியொற்றி அமைந்தது,

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னேயவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியாளுள் அன்னேயையும் அத்தனேயும் அன்றே நீத்தாள்

அகன்ருள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னே மறந்தாள்தன் மைங்கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே. எனவரும் திருத்தாண்டகம் ஆகும்.