பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ගී.

சிவமயம்

பன்னிரு திருமுறை வரலாறு

தி ரு மூ ைற

உலக மக்களுக்கு எக்காலத்தும் திருத்தகவிற் ருகிய உள்ள நிலைமையை வழங்குதற்குரிய அருள் நூல்களே திருமுறைகளாம். " திருவென்பது பொரு ளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுந் திருத்தக விற்ருகியதோர் உள்ள நிகழ்ச்சி; அது வினையுள்ளுடைமையெனவும் படும்” என்ருர் பேராசிரியர். எனவே இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டையும் ஒப்பக்கருதும் மனச் செம் மையே இத் திருவென்னுஞ் சொல்லுக்குரிய பொரு ளென்பது பேராசிரியர் கருத்தாதல் நன்குபெறப்படும். உலக வாழ்க்கையில் உளவாகும் ஆக்கங்களே யெண்ணிக் களிப்படைதலும் கேடுகளே நினேந்து அவலமுறுதலும் எல்லோரிடத்தும் பொதுவாகக் காணப்படும் மனவியல்பாகும். இவ்வாறு செல்வக் களிப்பால் மையலுருமலும் அல்லல் மிகுதியால் சோர் வடையாமலும் இன்பதுன்பம் இரண்டினேயும் ஒப்பக் கருதும் நல்லறிவுடையவர்களே திருத்தகவிற்ருகிய உள்ள முடையோராவர். இத்தகைய பெரியோர்களேக் * கேடும் ஆக்கமுங் கெட்ட திருவினர் ” எனப் போற் றுவர் சேக்கிழாரடிகள்.

திருவுடைப் பெரியோராகிய இவர்கள்,எத்தகைய பேரிடர்கள் அடுக்கி வந்தாலும் அவற்றைக் கண்டு - 1. பெரியபுராணம், திருக்கூட்டச் சிறப்பு.

8-ம் செய்யுள்.