பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

பன்னிரு திருமுறை வரலாறு


இயற்றினர்கள். இறைவன் பால் அயரா அன்பின ராகிய அவ்விரு வரது கருத்தும் நிறைவேறும் நிலையிற் பகவதியார் மகப்பேற்றிற்கு உரியவராயினர். ஞாயிறு முதலிய கோள்கள் உச்சநிலையிலே விளங்க அமைந்த நற்பொழுதிலே, சிவபெருமானுக்குரிய திருவா திரை நாளிலே சிவநெறியும் மறைழைக்கும் சிறந்து விளங்க வும், தமிழ்மக்கள் செய்த தவம் நிரம்பவும், தவப் பெருஞ் செல்வர்கள் மேற்கொண்ட நற்செயல்கள் இனிது நிறைவேறவும், எத்திசையினும் தென் திசையே உயர்வுபெறவும், அசைவில் செழுந் தமிழ் வழக்கே அயல்மொழி வழக்கின் துறைகளே வென்று மேம்படவும், இசைத்திறனும் மெய்யுணர்வும் யாண் டும் நிலைபெறவும், இறைவனது திருவிருத்- விளக்கம் எங்கும் உண்டாகவும், பிறவித் துன்பத்தைப் பெருக் கும் புறச்சமயங்கள் ஒளிமா * சி' தயவும், தவ.

நிலைக்குரிய சீகாழிப்பதியிலே க்கும் சிவமாந்: தன்மையை வழங்கவல்ல ஆகு, பிள்ளே யார் திருவவதாரஞ் செய்தருளினர். து தோற்றத் தால் எவ்வுயிர்களும் மகிழ்ச்சியு; பெயரிடுதல்.

தொட்டிலமர்வித்தல் முதலிய . . துகளும் உரிய நாட்களிற் சிறப்பாக நிகழ்ந்தன. பிற்றை நாளில் உமையம்மையாரளிக்கும் திருமுலேப்பாலேப் பருகி. ஞானத் தலைவராய்த் திகழும் நற்பேறுடைய பிள்ளே யார் க்கு அன்னே யாராகிய பகவதியார் இறைவன் திருவடிகளைப் பரவும் பேரன்பினேயே திருமுலேப்பாலு டன் சுரந்து அமுது செய்வித்தார். உலகத்தாரின் நற்பேருகத் தோன்றிய பிள் ளேயார்க்கு ஏனேய காப்புக் கள் மிகையென்று எண்ணித் திருநீற்றுக்காப்பினே அவர் தம் அழகிய நெற்றியிலனிந்தனர். தாயர் திருமடித்தலத்தும் அழகிய தவிசினிலும் தொட்டி லிலும் மெல்லிய படுக்கையிலும் பிள்ளே யாரையமர்த்தித் தாலாட்டி வளர்த்தனர்.

மெய்யுணர்வும் செந்தமிழும் தழைக்கத்தோன்றிய பிள்ளே யார் இங்ங்னம் வளர்ந்து வரும் நாட்களில், அவர் தவழ்ந்து தலேய ைசத்தாடிய தோற்றம்,