பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/801

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784

பன்னிரு திருமுறை வரலாறு


கற்றல் கேட்டலுடையார் பெரியார் கழல் கையாற்

ருெழுதேத்தப் பெற்ற மூர்ந்த பிரமாபுர மேவிய பெம்மான்

இவனன்றே (1-1-2)

என வரும் தொடரில், இத் திருக் குறட் பொருளே எடுத் தாண்டுள்ளார். வாலறிவன் என்பது, இறைவனேக் குறித்த பெயர். தூய மெய்யுணர்வே தனது திருமேனி யாக விளங்குபவன் என்பது இதன் பொருள். ஞானத் திரளாய் நின்ற பெருமான் என ஞானசம் பந்தர் இறைவனேப் போற்றியுள்ளமை வாலறிவன் ’ என்னும் இத்தொடர்ப் பொருளே இனிது விளக்குவ: தாகும். வாலறிவன் நற்ருள் தொழுதற்கு ஏற்றமுறை யிற் கற்கப்படு நூல்க ளாகத் திருவள்ளுவராற் சுட்டப் பட்டவை, உலக வாழ்க்கை யொன்றையே விரித் துரைக்கும் உலக நூல்கள் மட்டும் அல்ல என்பதும், இறைவனேப் பற்றியும், அப்பெருமானேயுணர்ந்து வழி படுதற்கேற்ற திருவுருவ அடையாளங்களேப் பற்றியும், அம்முதல்வன் அன் புடையார் வேண்டுகோட் கெளி வந்து எழுந்தருளிய திருக்கோயில்களே ப் பற்றியும், அவனே யடைதற்குரிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நெறிகளைப் பற்றியும், அந்நெறிகளில் ஒழுகும் அடியார்களுக்கு அருளாளனுகிய இறைவன் அருள் வழங்கும் நீர்மையினேப் பற்றியும் அறிவுறுத்தும் ஞான நூல்களே இங்குச் சிறப்பாகச் சுட்டப்பட்டன என்பதும் கூர்ந்து உணரத் தக்கனவாகும்.

இறைவனது திருவருட் பெருமையினே உணர்ந்து உய்திபெறும் நோக்கத்துடன், ஆயிரக் கணக்கான வேதம் ஆகமம் முதலிய மெய்ந் நூல்களேக் கற் றுணர்ந்தும் கற்ற கல்வியின் பயன் கடவுளடிகளே மறவாது போற்றுதலே என்னும் தெளிவில்லாதவர் களாய்த் தமது நூற்பயிற்சி யொன்றையே யெண்ணி