பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 785

வியந்து நின்று வாழ்நாளே வீழ்நாளாக்கும் நற்பேறில் லாத மக்களே நோக்கி அப்பரடிகள் இடித்துக் கூறுவ தாக அமைந்தது,

குறிகளும் அடையாள முங் கோயிலும் நெறிகளும் அவர் நின்றதோன் நீர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஒதினும் பொறியிலீர் மனம் என் கொல் புகாததே. [5–90–6] என வரும் திருக்குறுந் தொகையாம். இத் திருப்பாடல் இரண்டாந் திருக்குறளுக்கு வி ள க் க உரையாக அமைந்தமை அறிந்தின் புறத்தக்கதாகும்.

அன்பினுற் கசிந்துருகிப் போற்றும் அடியார்களின் நெஞ்சமாகிய தாமரையிலே, அவர்கள் நினேந்த திரு மேனி கொண்டு எழுந் தருளியிருத்தல், இறைவனது அருளின் நீர்மையாதலின், எல்லாம் வல்ல முதல் வனுக்கு மலர்மிசை ஏகினன் என்பது ஒரு திருப் பெயராயிற்று. நினைப்பவர் நெஞ்சத் தாமரையினயே கோயிலாகக் கொண்ட இறைவனது மாண்புமிக்க திரு வடிகளே இடைவிடாது நினேந்து போற்றுவார் எல்லா வுலகிற்கும் மேலாகிய வீட்டுலகின் கண் எக்காலத்தும் அழிவின்றி வாழ்வார் என்பது,

மலர்மிசை யேகிருன் மானடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ்வார் ’ (3) என்பதல்ை உணர்த்தப்பட்டது.

இறைவனேக் குறித்தமைந்த மலர்மிசை ஏகினன்' என்னும் இத்தொடர்ப் பொருளே,

  • சினமலி யறுபகை மிகு பொறி சிதைதருவகை வளிநிறுவிய

மனனுணர்வொடு மலர்மிசை யெழுதரு பொருள்

நியதமு முணர்பவர் தனதெழிலுருவது கொடுவடை தகுபானுறைவது

நகாமதிள் கனமருவிய சிவபுரநினேபவர்கலேடிகள் தரநிகழ்வரே

(i-2 1-5) எனவும்,