பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/808

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

790

பன்னிரு திருமுறை வரலாறு


அருளாகிய கைகொடுத்துப் பற்றிவெடுத்து ஈறிலாப் பேரின்ப வாழ்வாகிய இன் பக்கரையில் ஏற்றியருள் கின் றது. இறைவனது அருளுபகாரமாகிய இந்நிகழ்ச்சியை,

  • இருள்தரு துன்பப்படல மறைப்ப மெய்ஞ் ஞானமென்னும் பொருள்தரு கண்ணிழந்துண் பெர்ருள் நாடிப் புகலிழந்த குருடருந் தம்மைப் பரவக் கொடுநரக் குழி நின் றருள்தரு கைகொடுத் தேற்றும் ஐயாறன் அடித்தலமே' என வரும் திருப்பாடலில் திருநாவுக்கரசர் இனிது விளக்கியருள்கின் ருர்,

இத்திருப் பாடலின் சொற்பொருளமைதியைக் கூர்ந்து நோக்குங்கால், இருள் சேர் இருவினே' என்ற தொடரில் இருள்' என்றது. மெய்யுணர்வைப் பெற வொட்டாது உயிர்களின் அறிவுக்கண்ணே மறைக்கும் ஆற்றலுடைய இருள் மலத்தினேயே என்பதும், அவ விருட்பட மறைப்பினுலே உயிர்கள் அறிவுக்கண்ணே யிழந்து அல்லற்படுகின்றன என்பதும், பொருள் சேர் புகழ்' என்ற தொடரிற் பொருள் என்றது, இறைவனது திருவருள் ஞானத்தையே என்பதும், இறைவனது புகழ் அவனருளும் மெய்ஞ்ஞானமாகிய அதன் துணை கொண்டே உணர்தற்குரிய தாதலின், அதனே த் திரு வள்ளுவர் பொருள் சேர் புகழ்' என அடை கொடுத் தோதினர் என்பதும் நன்கு புலனுகும்.

ஆணவமாகிய இருள் நீங்க நோக்கும் ஞான நாட்டம், உயிர்கட்கு இயல்பாக அமைந்ததன்று என் பதும், இருளே நீக்கி உயிர்கட்கு இன்பமளிக்க வல்ல அருளும் பேரறிவும் ஆற்றலும் ஒருங்குடைய முதல்வன் இறைவன் ஒருவனே என்பதும் திருமுறை யாசிரியர் களாகிய சிவநெறிச் செல்வர்கள் துணி பாகும். இந் நுட்பம்

இருளற நோக்க மாட்டாக் கொத்தையேன்” (4-59-1}

எனவும்,