பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/813

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 795

தான் எனப் பொய் யில் புலவர் போற்றியுள்ளார். ' தனக்குவமை யில்லாதான் என்னும் இத்தொடர்ப்

பொருளே,

தன்னெப் பாரில்லாத் தூயவன் ’ (i— í 13—2)

தன்னேர் பிறரில்லானே : (2-62-3) என ஞானசம்பந்தரும்,

தன்னுெப்பா ரில்லாதானே ? (6-46-2)

  • மற்ருருந் தன்னுெப்பாரில்லாதானே ’ (6-1-2)
  • g தன்குெப்பில்லாத் தில்லே நடம்பயிலும் தலைவன் தன்னே ?

(6-33-6)

என நாவுக்கரசரும் எடுத்தாண்டுள்ளார்கள்.

தனக் குவமையில்லாத இறைவன் திருவருள் வழி நின்று தற்போதம் நீங்கப்பெற்ற அடியார்கள், ஞாயிறு எங்கே தோன்றினுல் மக்கென்ன என்று எத்தகைய மனக்கவலேயுமின்றி இனி திருப்பார்கள் என்பது,

எங்கெழி லென்ஞாயி றெளியோமல் லோம் ?

என வரும் திருநாவுக்கரசர் அநுபவ மொழியால் நன்கு தெளியப்படும்.

' கண்ணுதல் தன் நிறைவதனிற் கலந்தார்க்குப் பண்டை ஏகதேச வுணர்வு தூர்ந்து போதலின், ஏக தேச வுடம்பில் நிகழும் இன்பத் துன்பத்திற்கு ஏது வாகிய உற்பாத முதலியவற்றை நோக்கி வரக்கடவ தோர் கவலேயின்மையின், எங்கெழிலென் ஞாயிறெமக் கென்று குறைவின்றி நிற்பா ராயினரென்பது தனக் குவமையில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் - மனக்கவலை மாற்றலfது ' என எதிர் மறை முகத்தாற் கூறியதும் இதுபற்றி என்க.“ (சித்தியார் . சுபக் - சூ . அ - 31-ம் செய்யுள் உரை) எனச் சிவஞான முனிவர் கூறிய விளக்கம் இங்கு உணரற் பால தாம்.