பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

798

பன்னிரு திருமுறை வரலாறு


பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான் ஏஜனப் பொருளும் இன்பமும் பிறவெனப்பட்டன’ என்பது பரிமேலழகர் தரும் விளக்கமாகும்.

எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவ னுடைய திருவடிகளே வணங்காத தலைகள், தத்தமக்கு உரிய புலன்களையுணரும் ஆற்றலில்லாத பொறிகளைப் போலப் பயன்படாதனவே என்பது,

கோளில் பொறியிற் குணமிலவே எண் குணத்தான் தாளே வனங்காத் தலே ’’

என்பதகுற் கூறப்பட்டது. “ எண்குணங்களாவன : தன் வயத்தளுதல், தூயவுடம்பினளுதல், இயற்கை யுணர்வினளுதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற் றலுடைமை, வரம்பிலின்ப முடைமை என இவை. இவ் வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது ” என்பர் பரிமே லழகர். இறைவனுடைய அருட்பண்புகள் எண்ணிறந் தன. ஆயினும், அவற்றை எண்குணங்களுள் அடக்கிக் கூறுதல் சிவாகம மரபாகும். இறைவனுக்கு வழங்கும் எண்குணத்தான்’ எ ன் னு ம் இத்திருப்பெயர்ப் பொருளைச் சிவநெறிச் செல்வர்கள் சிறப்பாக வழங் கியுள்ளார்கள் என்பது,

எட்டுக் கொலாமவர் ஈறில்பெருங்குணம் ' [5–18–87 எட்டுவான் குணத்தீசன் ? [5–89–8] காதல் எண்குணவன் காண் ? [5-63-4] எண்குணத்தார் எண்ணுயிரவர்போலும் (6-1 6-4)

எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழிகளால் நன்கு புலகுைம்.

எண்ணமரும் குணத்தாரும் ” (2-69–1) என்ருர் ஆளுடைய பிள்ளேயாரும். இத்தொடரை அமரும் எண்குணத்தார் என இயைத்து எல்லா