பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/817

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 799

வுயிர்களாலும் விரும்பிப் போற்றத்தக்க எண் குணங் களேயுடைய இறைவர் எனப்பொருள்கொள்க. "இறை யவனே மறையவனே எண் குணத்தினனே’ (7-10-8) என்ருர் நம்பியாரூரரும்.

இறைவனது பொருள் சேர் புகழுரையினை நாவி ஞல் விரித்துக் கூறுதற்கெனச் சொல்வளம் வாய்ந்த வாயும், இறைவன் புகழ்த்திறங்களேச் சான்றேர் வாயி லாகக் கேட்டுணர்ந்து நெக்கு நெக்கு நினேந்துரு கு தற்கென நேயமலிந்த நெஞ்சமும், ஞானத்திரளாய் விளங்கும் இறைவனது நற்ருளே வணங்கித் தாடலே போல் ஒன்றுதற் பொருட்டுச் சிறப்பமைந்த தலையும், மனனுணர்வுடைய மாந்தர்க்குக் கடவுளால் வழங்கப் பட்டன என்பது அருளாளராகிய சான்றேர் துணி பாகும்.

வாழ்த்த வாயும் நினே க்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் துாவித் துதியாதே வீழ்த்தவா வினேயேனெடுங் காலமே. (5–90–7)

எனவரும் திருப்பாடல், மக்கள் பெற்றுள்ள சிறப்புடைய பொறிகளின் ப ய ன் இவையென விளக்கி நிற்றல் காண்க.

எண்குணத்தாகிைய இறைவனது நற்ருளேத் தலே யால் வணங்கியவர்கனே தலைசிறந்த நன்மக்களாவார் என்னும் இக்கருத்தினே,

'கலேயார் தொழுதேத்தியகாழி

தலையாற் ருெழுவார் தலேயாரே' [1–34–6] அலேயார் புனல்சூடி யாகத் தொருபாக

மலேயான் மகளோடு மகிழ்ந்தானுலகேத்தச் சிலேயாய் எயில் எய்தான் சிற்றம்பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலேயாளுர்களே” (I-80–7)