பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/823

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 805

திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளி யிருக் கும் சிவபெருமானுக்கு வானேர்கள் அன்புடன் செய்து மகிழ்ந்தார்கள் என்பது,

" நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல

நறுஞ் சாந்தங் கொண்டேத்தி நாளும் வானுேர் சிறப்போடு பூசிக்குந் திருவாரூரில்

திருமூலட்டானத்தெஞ் செல்வன் ருனே’ (6-80-5)

என வரும் திருத்தாண்டகத்தாற் புலனும். இத்திருப் பாடலின் சொற்பொருளமைதியினைக் கூர்ந்து நோக்குங் கால்,

  • சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானுேர்க்கும் ஈண்டு '

என்னும் திருக்குறள் நினைவுக்கு வரும். மழை பெய்யாதாயின் இவ்வுலகில் கடவுளுக்குச் செய்யப் பெறும் சிறப்பும் பூசனையும் நிகழ்த்துதல் வானோர்க்கும் இயலாத செயலாம் ' என இத் திருக்குறளுக்கு மேலும் ஒரு பொருள் விளங்கித் தோன்றுதல் காணல. ம். சீர்காழிப் பதியிற் சிவபெருமானே வழிபட எண்ணிய வானேர் தலைவனுகிய இந்திரன், வழிபாட்டிற்கென த் தான் அமைத்த நறுமலர் நந்தவனம் மழையின்றி வாடிய நிலையிற் காவிரியை வேண்டி வரவழைத்து அதன் நீரை நந்தவனத்துக்குப் பாய்ச்சி வளர்த்தான் என வழங்கும் கந்தபுராண வரலாறு, மழையில்லே யானுல் மக்களே யன் றி இவ்வுலகில் வந்து இறைவனே வழிபட்டு உய்தி பெற விரும்பும் வானேரும் சிறப்பும் பூசனையும் செய்ய வழியின்றி வருந்துவர் என்பதனே வற்புறுத்துவதாகும். இ வ் வு ல கி ல் மழையின்மை மாநிலத்தாராய மக்கள் வாழ்க்கைக்குத் தடை விளேப்பதோடன்றி, இங்கு வந்து வானேர் நடத்தும் பூசனே முதலியவற்றுக்கும் தடை வினைப்பதாகும் என்பார், வாஞேர்க்கும் செல்லாது ' என்ருர், ஈண்டுச்