பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 807

' தொண்டரஞ்சு களிறும் மடக்கிச் சுரும்பார் மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால் வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்

கெண்டை பாயச் சுனே நீல மொட்டலருங் கேதாரமே ’ [2-i 14–1}

என வரும் திருப்பாடலில் விரித்துரைத்துப் போற்றியுள் ளார். உயிர்களது உள்ள த்தை நல்வழியிற் செல்ல வொட்டாது அலேக்கழித்து வருத்தும் ஐம்பொறிகளாகிய களிறுகளே அறிவாகிய தோட்டியினல் (அங்குசத்தால்) அடக்கும் உபயமறிந்து அடக்கியாளும் அருளாள ராகிய மெய்யடியார்கள் திருவுளக் கருத்திலே என்றும் நீங்காது எழுந்தருளியிருக்கும் இறைவனது சிறப்பியல் பினே,

வருத்தின களிறு தன்னே வருத்துமா வருத்த வல்லார் கருத்தினில் இருப்பர் போலுங் கடவூர் வீரட்டனுரே '

என வரும் தொடரால் திருநாவுக்கரசர் நன்கு விளக்கி யுள்ளார். திருவள்ளுவர் ஒரைந்தும்’ எனக் குறித்த பொறிகள் ஐந்தினையும் ஐந்து களிறுகளாக உருவகஞ் செய்தும், அவர் வெளிப்படையாக உருவகித்துக் காட்டிய உரன் என்னுந் தோட்டியினேக் குறிப்பாக உணரவைத்தும், ஆளுடைய பிள்ளேயாரும் அப்பரடி களும் இத் திருக்குறட் பொருளே யெடுத்தாண்ட நயம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். ஜம்புலன்களே வென்ற அறவோராகிய நீத்தார் பெருமையினே,

ஐந்து புலன்களேக் கட்டவர் போற்ற அந்தண்

புகலிநிலாவிய புண்ணியனே ? (1–4–8] புலன்கள் தமை வென்ருர் புகழவர்' புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்ருர் வாழும் பூம்புகலி'

ք1-16-8]

என வரும் திருஞானசம்பந்தர் வாய்மொழிகள் இனிது விளக்கு வனவாம். இங்ங்னம் புலன்களே வென்ற பெரி