பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/829

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 8] 1

புகழானது அவர்வாழும் நில எல்லேயைக் கடந்தும் நீண்டு பரவும் பெருமையுடையது என்பார், நிலவரை நீள் புகழ் என்ருர் ஆசிரியர். எனவே புகழானது, தன்னைத் தோற்றுவித்தார்க்கு நிலைக்களமாய் விளங் கும் நிலவெல்லேயைக் கடந்தும் நீண்டுயர்ந்து பரவும் பெருமையுடையதென்பது பெறப்படும். புகழ் ஞாலத்தி னும் மாணப்பெரிது எனத் திருவள்ளுவர் கூறிய இக் கருத்தினே மண் தேய்த்த புகழினுன் ” என்ற தொட ரில் இளங்கோவடிகளும் குறித்துள்ளமை காணலாம். " மண் தேய்த்த புகழ்-பூமி சிறுகும்படி வளர்ந்த புகழ் ” என்பர் அரும்பத வுரையாசிரியர். மண் தேய்த்த ’’ என்ருர், புகழ்வளரப் பூமிசிறுகலான்; மண் இடத்திற் சிறிது என்ருர் வள்ளுவனரும் என்பது இத்தொடர்க்கு அடியார்க்கு நல்லார் தரும் விளக்கமாகும். மண் இடத்திற் சிறிது என்ருர் வள்ளுவனுரும் என அடியார்க்கு நல்லார் சுட்டிய கருத்து, புகழ் என்னும் அதிகாரத்தில் வந்துள்ள நிலவரை நீள் புகழாற்றின் எனவரும் இத்திருக்குறளில் அ ைம ந் தி ரு த் த ல் கூர்ந்து நோக்கத்தக்கதாகும். தான் உண்டாதற்கு விளே நில மாகிய நிலத்தின் எல்லே யைக் கடந்தும் நீண்டு வளர்ந்து பரவி அதனே அகத்திட்டுக் கொள்ளும் தன் மையது புகழ் என்பது புலப்படுத்துவார் நில வரை நீள் புகழ் என்ருராதலின் , அத்தகைய புகழை நோக்க நிலமாகிய மண் இடத்திற் சிறிது என் ரு ராயிற்று. இங்ங்னம் வையத்தைச் சூழ்ந்து அதனே அகத்திட்டுக் கொள்ளும் பெருமை வாய்ந்தது. புகழ் என்பதனே ஆசிரியர் சுழலும் இசை (திருக் குறள் 777) என்ற தொடராற் பின்னரும் குறிப்பிடுதல் காணலாம். சுழலும் இசை-வையத்தைச் குழ்ந்து நிற்கும் புகழ். வையத்தைச் சூழும் எனவே அதன் பெருமை .ெ 1ற்ரும். சூழ்தல் அகத்திடல் ' எனப்