பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/830

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

812

பன்னிரு திருமுறை வரலாறு


பரிமேலழகர் தரும் விளக்கம் இங்கு நோக்கத்தக்க தாகும். இங்ங்ணம் உலகத்தைச் சூழ்ந்து பரவும் புகழின் விரிவினை நோக்கும்பொழுது அதற்கு நிலைக்களமாகிய பூமியின் எல்லே மிகச் சுருங்கித் தோன்றுதல் புலனும். இந்நிலையில் மண் இடத்திற் சிறிது’ என்னும் வள்ளுவனர் கருத்தும் உய்த்துணரப்படும்.

  • புகழெனின் உயிருங் கொடுக்குவர்

பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்’

(புறம்-)

என்னும் சான் ருேர் கூற்று, உயிரின விடப் புகழே பெருமைவாய்ந்தது என்னும் உண்மையினே வற்புறுத் தல் காணலாம்.

நம்பியாரூரர் அருளிய திருப்ப திகமாகிய தமிழ் மாலேயினேப் பாடும் நற்பணி பூண்ட அன்புடைத் தொண்டர்கள், கடல் சூழ்ந்த நிலவுலகினும் நீண்டு பரவிய பெரும் புகழைப் பெறுவார்கள் எனப் பயன் கூறுவதாக அமைந்தது,

ஆருரன தமிழ்மாலேகள் பாடும் அடித்தொண்டர் நீருர்தரு நிலளுேடுயர் புகழா குவர் தாமே (1-71-10)

என வரும் திருக்கடைக்காப்புத் தொடராகும். இதன் கண் நீரூர்தரு நிலளுேடு உயர் புகழாகுவர் என்ற பகுதி, மேற்காட்டிய நிலவரை நீள் புகழ் என்னும் திருக்குறள் தொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை காண்க.

உயிரை உடம்பினின்று பிரிக்கும் தெய்வ ஆற்ற லேக் கூற்றம் என்பர். உயிரையும் உடம்பையும் வெவ் வேறு கூருகப் பிரித்தலால் கூற்றம் என்பது காரணப் பெயர். இத்தகைய கூற்றத்தை விலக்கி உய்தல் என் பது, ஒருவராலும் இயலாத செயல் என்பதனை மாற்றருங்