பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/833

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 315

என்ருர் பொய்யில் புலவர். உடம்பு தூய்மையடை தற்கு நீர் இன்றியமையாதவாறு போல, மனம் து ய்மையடைதற்கு வாய்மையாகிய ஒழுக்கம் இன்றி யமையாதது என்பது கருத்து. இக்கருத்தினே,

  • காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக இேயமே நெய்யும்பாலா நிறைய நீரமைய ஆட்டிப் பூசனேயீசனுக்க்குப் போற்றவிக் காட்டிளுேமே (3-76-4;

என வரும் திருப்பாடலில், வாய்மையே துய்மை

யாக என உடன்பாட்டு முகத்தானும், வாய்மை யால் துரியேனல்லேன் (4.54-7) என எதிர்மறை

முகத்தானும் அப்பாடிகள் எடுத்தாண்டுள்ளார்.

ஒருவர் பிறர்க்குத் துன்பம் விளேக்கும் தீமைகளே முற்பகலிலே செய்வாராயின், அத்தகைய துன்பங்கள் பிறர் செய்யாமலே பிற்பகலிலேயே அவரைச்சார்ந்து வருத்தும் என்பார்,

  • பிறர்க்கின்கு முற்பகற் செய்யின் தமக்கின்னு

பிற்பகல் தாமே வரும் '

என்ருர் திருவள்ளுவர், இங்கே முற்பகல், பிற்பகல் என்பன ஒருநாளின் முற்கூருகிய காலேயையும் பிற்கூறுகிய மாலேயையும் உணர்த்துவதோடு முற் பிறப்பு, இப்பிறப்பு முற்கணம் பிற் கணம் என்ற பொருள் களேயும் தந்து நின்றன. இத்திருக்குறட்பொருளே,

  • முற்பகற் செய்தான் பிறன் கேடு தன் கேடு

பிற்பகற் காண்குறு உம் பெற்றியகாண் ” எனக் கண்ணகியார் கூற்றில் வைத்து இளங்கோவடி

கள் எடுத் தாண்டுள்ள மை இங்கு நோக்கத்தக்கதாகும். கொலே, கொள்ளே முதலிய அளவின்மிக்க தீ வினே