பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 8; 7

உடம்பிற்கும் உயிர்க்கும் இடையே யமைந்த தொடர்பு, பறவையின் கூட்டிற்கும் அதனுளிருந்து பறந்து செல்லும் பறவைக்கும் அமைந்த சிறிது காலத் தொடர் பேயன் றி நிலைபெற்ற தொடர்பாகாது என்பார்,

குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்தே உடம்போ டுயிரிடை நட்பு

என் ருர் ஆசிரியர். இதன் கண் குடம்பை என்ற சொல்லுக்கு முட்டை எனப் பொருள்கொண்டு, முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப, அதனுள்ளிருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்துபோன தன்மைத்து ; உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு என உரை வரைந்தார் பரிமேலழகர். கருவும் தானும் ஒன்ருய்ப் பிறந்து வேருந்துணையும் அதற்கு ஆதாரமாய் நிற்பது முட்டையாதலால் அதனை உடம்பிற்கு உவமையாகவும், அம்முட்டையுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமற் பறந்து போதலின் புள் உயிர்க்கு உவமையாக வும் கொள்ளப்பட்டன. இங்கு நட்பு’ என்றது குறிப்பு மொழியாய் நட்பின்றிப் போதலே யுணர்த்தி நின்றது. அறிவாய் அருவாய் நிலையுடையதாய் நின்ற உயிரும், அறிவில்லாத தாய் உ ரு வா ய் அழியக்கூடியதாய உடம்பும் தம்முள் நட்புடையன அல்ல என இக்குறளுக் குப் பரிமேலழகர் கூறிய விளக்கம் சிறப்புடையதாகும்.

எனினும் இங்கு வழங்கிய குடம்பை என்ற சொல்லுக்கு முன்னுள்ளோர் கூடு . எனவே பொருள் கொண்டுள்ளார்கள், “ இனிக் குடம்பை என்பதற்குக் கூடென்று ரைப்பாருமுளர். அது புள்ளுடன் தோன்ற மையானும் அதன்கண் மீண்டு புகுதலுடைமையானும் உடம்பிற்கு உவமையாகாமையறிக ” என மறுப்பர் பரிமேலழகர். உவமையென்பது ஒரு புடையொப்பு மையே யாதலானும், ஈண்டுக் கூடு என்றது பறவை கள் முட்டையிடுதற் பொருட்டு அமைத்துக்கொண்ட