பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/836

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818

பன்னிரு திருமுறை வரலாறு


ஈனில் என்னும் கூட்டினேயே யாதலான் அக் கூட்டி னகத்தே முட்டையிலிருந்து வெளிப்பட்ட குஞ்சு மீண் அதனுட் புக வேண்டும் என்னும் இன்றியமையாமை இல்லேயாதலானும் குடம்பை என்பதற்குக் கூடு எனப் பொருளுரைத்தல் தவருகாதென்றே கொள்ளவேண்டி

tijöT 35.

கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே ’ (5-84-2)

எனத் திருநாவுக்கரசர் உடம்பினேக் கூடாகக் குறித் தது, இத்திருக்குறட்பொருளே நினைவுபடுத்துதல் காணலாம்.

உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடி தின் மாறி மாறி வருகின்றமைபோன்று, இறப்பும் பிறப்பும் விரைவில் மாறிமாறி வரும் என்பது,

உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு

என்பதல்ை அறிவுறுத்தப்பட்டது. இதனே,

உறங்கி விழித்தா லொக்கும் இப்பிறவி ’ (7-3-4)

என்ற தொடரில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் எடுத்துக் காட்டிய திறம் நினேந்து மகிழத் தக்கதாகும்.

உடம்பாகிய ம ன யி னு ன் ஐம்பொறிகளோடு உடய்ை ஒதுக்குக் குடியிருந்து அவற்றல் துன்புறுத் தப்பட்டு இவ்வாறே பிறவிகள் தோறும் பல வேறுடம் பு களிற் புகுந்து ஒன்றினும் நிலத்து நில்லாது அல்லற் படும் உயிர்க்கு, என்றும் தனக்கேயுரியதாக நிலே யாகத் தங்குதற்கென்று ஒரு தனிவீடு இன்னும் அமையவில்லேயே என்று, இங்ங்னம் யாக்கை நிலே யாமையினே எண்ணி வருந்துவதாக அமைந்தது,