பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/842

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824

பன்னிரு திருமுறை வரலாறு


என இத் திருக்குறட்குப் பரிமேலழகர் விளக்க வுரை வரைந்துள்ளார். அவர் குறித்த ஐயங்கள் பல வற்றுள் மறு பிறப்பும் இருவினைப் பயனும் உளவோ இல்லவோ என்னும் ஐயத்தின் நீங்கி அவையுண் டெனத் தெளிந்தார்க்கும் க ட வு ள் உண்டோ இல்லையோ என்றதொரு ஐயம் மட்டும் நீங்கா திருக்கு மாயின், முன்னேய ஐயங்களின் நீங்கித் தெளிந்தமை யாற் சிறிதும் பயனின்ரும்.ஆகவே மக்களுக்கு ஒருதலே யாக நீங்கத்தக்க ஐயம், க ட வு ள் உண்டோ இல்லையோ " என்ற ஒன்றேயாகும். இத்தகைய ஐயத் தின் நீங்கித் தெய்வம் உண்டு எனத் தெளிதலும் அங்ங்னந் தெளிந்த மெய்யுணர்வுடைய சான்ருேரைப் போற்றி வழிபட்டு அவர்கள் அறிவுறுத்த நன்னெறி யில் ஒழுகுதலும் வேண்டும் என்பதனே,

தெய்வந் தெளிமிந் தெளிந்தோர்ப் பேணுமின் ’

என வரும் தொடரால் இளங்கோவடிகள் அறிவுறுத்தி யுள்ளார்.

மறு பிறப்பும் இருவினேப் பயனும் உண்டெனத் தெளிந்து எவ்வுயிர்க்கும் இரக்கமுடைய ராய் அரு ளொழுக்கம் மேற்கொண்ட சமண் சமயச் சான் ருேரும் தெய்வமென்ப தொன்று உண்டோ இல்லேயோ என ஒன்றில் துணிவுபெருது ஐயுறும் நிலையிலேயே அமைந் தனர் என்பதனே,

" ஐயுறும் அமணரும்’ (1-128-36)

எனவும்,

  • தெற்றென்று தெய்வந் தெளியார் . (3—54—Í 1 )

எனவும் வரும் தொடர்களால் திருஞானசம்பந்தர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய ஐயங்களி னின்றும் நீங்கித் தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி