பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/844

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

826

பன்னிரு திருமுறை வரலாறு


  • தையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானத் தெய்வமாப் பேணுதார் தெளிவுடைமை தேருேமே ’

{2–41–9]

என வரும் ஆளுடைய பிள்ளையார் அருளுரையால் உணரப்படும்.

ஐம்புலன்களாகிய ஐவகையுணர்வின் வழியே ஒடித் திரியும் மனமானது, உரனென்னுந் தோட்டி யால் அப்புலன்கள் ஐந்தையும் அடக்கியாளும் ஒருமை நிலேயைப் பெற்ருல் மட்டும் போதாது. ஒருமை நிலைபெற்ற மனம், மெய்ப்பொருளாகிய க ட வு ளே இடைவிடாது நி னே ந் து ண ந ம் தியான மாகிய பயிற்சியைப் பெற்று இன்புறுதலே, தவநிலையின் முடிந்த பயனுகும் என அறிவுறுத்துவார்,

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்ே

மெய்யுணர் வில்லாதவர்க்கு ’

என்ருர் திருவள்ளுவர். எனவே ஜம்புலன்களையும் அடக்கியாளும் தவம், யோகம் முதலிய சிறந்த சாத னங்களால் மட்டும் பயனில்லே யென்பதும், உயிர்கள் அடைதற்குரிய மெய்ப்பொருளேத் தெளிந்து சிந்தித் துணர்ந்து போற்றுதலே நற்பயன் தரும் என்பதும் இனிது பெறப்படும். இத்திருக்குறளில் மெய்யுணர் வில்லாதவர் என வரும் தொடர்க்கு மெய்யினை உணர்தலில்லாதார் - உண்மைஞானம் பெரு தார் ’ எனப் பொதுவகையிற் .ெ ப ா ரு ள் கொள்ளுதல் ஆசிரியர் கருத்தன்றென்பதும், தோற்றக் கேடு களின்றித் தூய்தாய் என்றும் உள்ள மெய்ப்பொரு ளாகிய இறைவனே உணர்ந்து போற்ருதார்க்குப் புலனடக்க முதலிய வெறும் சாதனங்களால் மட்டும் பயனில்லே' எனச் சிறப்புவகையாற் கூறுதலே இக்குற ளில் ஆசிரியர் அறிவுறுத்த எடுத்துக்கொண்ட பொரு ளென்பதும் தேவார் ஆசிரியர்கள் கருத்தாகும். இந் நுட்பம்,