பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/849

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 83!

  • காமஞ் சான்ற கடைக்கோட் காலே ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (கற்பியல்-51)

என வரும் நூற்பாவால் தொல்காப்பியர் அறிவுறுத்தி யுள்ளார். எல்லாவுயிர்களுக்கும் உயிர்க்குயிராய்ச் சிறந்து விளங்குதல் இறைவனது இயல்பாதலின், மன்னுயிர்கட்குத் தோன்றத் துணையாய் உடனின்றுத வும் சிறப்புடைய கடவுளேச் சிறந்தது என்ற பெயராற் குறித்தார் ஆசிரியர். தோற்றக் கேடுக ளின்றி என்றும் உள்ள தாய், எப்பொருளும் நிலே த்தற் கேற்ற சார்பாய்த் தன் பால் பிறிதொரு பொருளும் ஊடுருவ இயலாத செறிவுடைமையால் தூய தாய், எத் தகைய திரிபும் இன்றி என்றும் ஒரே பெற்றியதாய் விளங்குதல் முழுமுதற் பொருளின் இயல்பாதல் பற்றி, அதனே ச் செம்பொருள் எனவும், உள்ளது . எனவும், சார்பு என் வும் திருவள்ளுவர் குறிப்பிடு கின் ருர். சிறந்தது பயிற்றல்' என்னுந் தொல்காப்பியத் தொடர்ப் பொருளேயே சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்பது என்ற தொடரால் தெய்வப் புலவர் விரித் துக் கூறியுள்ளார். " சிறந்தது என ஆன்ருே ராற் போற்றப்பெறும் செம்மை வாய்ந்த பெரும் பொருளே ஒன்றிய வுள்ளத்தாற் சிந்தித்துப் போற்றுதல் என்பது மேற் காட்டிய தொடரின் பொருளாகும். இங்ங்னம் செம்மையேயாய சிவபரம்பொருளே இடைவிடாது நினைந்து வழிபடுதலே பிறவிக்குக் காரணமாகிய பேதைமையினை அகற்றி உய்தி .ெ ப று த ற் கு ரி ய நன்னெறியாம் என்பதனே,

பிறவியால் வருவன கேடுள வாதலின் பெரிய வின்பத் துறவியார்க் கல்லது துன்ப நீங்காதெனத் தூங்கிளுயே மறவல் நீ மார்க்கமே நண்ணிஞய் தீர்த்தநீர் மல்கு

சென்னி அறவரூைர் தொழுதுய்யலாம் மையல் கொண்டஞ்சல்

நெஞ்சே." (2-79–5)

என்ற திருப்பாடலில் திருஞானசம்பந்தர் உள்ள த்திற்கு அறிவுத்தும் முகமாகத் தெளிய விளக்கியுள்ளார்.