பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 6?

வனே அன்பினல் வழிபடும் அடியார்களுக்கே இறை வ னது திருவருள் எளிதிற் கிடைக்கும் என்னும் நல்லு ணர்வுடன் அப்பெருமானத் தொழாது, தாங்களே முதல்வர் எனக் கருதும் வழுவான மனத்தாலே மயக்கமுற்ற திருமாலும் பிரமனும், பன்றியும் அன்ன மு மாகி இறைவனுடைய அடியும் முடியும் தேடி அறி யாது அயர்வுற்றுப் பின்பு திருவைந்தெழுத்தோதி உய்ந்த செய்தியினே ஒன்பதாவது திருப்பாட்டில் எடுத்துரைத்தார். கலேஞானங்களுக்கெல்லாம் முதல் வராகிய சிவபெருமானது திருவருள் நெறியை யறிந்து உய்யும் மெய்யுணர்வின்றித் தம்மில் தாமே நன்மை யைத் தேடிக்கொள்ள முயலும் சமணர் புத்தர் ஆகிய வர்களுடைய சமய நெறிகள் பழிவிளேக்குங் குற்ற முடையனவே என்பதனைப் பத்தாந் திருப்பாடலில் தெளிவாக அறிவுறுத்தியருளினர். இவ்வாறு தோடு டைய செவியன்’ எனத் தொடங்கிய திருப்பதிகத் தைப் பத்துப் பாடல்களால் நிறைவு செய்து, பதிகப் பயன் கூறும் பதினென்ரும் பாடலாகிய திருக்கடைக் காப்பினையும் பாடித் தம் கண்ணெதிரே விசும்பின் கண் விடைமீது தோன்றியருளிய அம்மையப்பரைத் தொழுது நின் ருர்,

எல்லேயற்ற பிறவிக்கடலேக் கடந்திடும்படி தம்மு டைய திருவடித் துணையாகிய புனேயினத் திருஞான சம்பந்தப் பிள்ளே யார்க்குத் தந்தருள வந்த சிவபெரு மான், உமாதேவியாருடன் திருத்தோணி புரத் திருக் கோயிலே நோக்கி எழுந்தருளினர். அது கண்டு ஆளு டைய பிள்ளேயாரும் தம் கண்வழி சென்ற கருத்து விடாது தொடர்ந்து செல்லத் தாமும் திருத்தோணி புரத் திருக்கோயிலே நண்ணினர். தவம்பல செய்து இவர்க்குத் தா தையெனும் பெருமைபெற்ற சிவபாத விருதயர், பிள்ளேயாரை அடித்தற்கு ஓங்கிய சிறிய கோல் தம் கையினின்றும் நெகிழ்ந்து கீழேவிழ,