பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/851

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 833

பொருளேயும் விரும்பாமையாகிய அவா நீக்கத்தை வேண்டத் தானேயுளதாகும். இது,

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்றது.

வேண்டாமை வேண்ட வரும் ”

என்பதல்ை உணர்த்தப் பெற்றது. இவ்வுலகிற் பிறப்புப் பிணி மூப்புக்களால் உயிர்கள் துன்புற்று வருதலே யுணர்ந்த நல்லறிஞர்க்குப் பிறவாமையாகிய இன்ப நிலையினப் பெறவேண்டும் என்னும் வேட்கையுண்டா தல் இயல்பாதலின், அன்னேர், தம் பொருட்டு ஒரு பொருளே வேண்டிப் பெற்றுக்கொள்ள விரும்பினுல், பிறவாமையாகிய இதனேயே வேண்டுவர் எனவும், இவ்வுலக வாழ்விற் கணந்தோறும் தோன்றியழியும் சிற்றின்பங்களைக் கருதி ஒரு பொருளை அவாவின் அத் தகைய அவாவானது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் எல்லேயற்ற துன்பமே விளேக்கு மாதலின், அது நீங்கும் பொருட்டு அவாவறுதியாகிய வேண்டாமையினை வேண்டிப் பெறின் பிறவாமை தானே வரும் எனவும் இத்திருக்குறளில் ஆசிரியர் குறித்துள்ளார். வேண்டுங் கால் வேண்டும் பிறவாமை என்னும் இக் கருத்தின,

  • ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்

கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந் தேன்' s?–21-2}

என வரும் தொடரில் நம்பியாரூரர் எடுத்தாண் இள்ள மை காணலாம்.

உயிர்கள் இறைவன்பால் வேண்டத்தக்க வேண்டு கோள்களுள் முடிவாக அமைந்த கடைசி விண்ணப்பம் பிறவாமையாகிய ஒன்றேயாகும்.