பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/852

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

834

பன்னிரு திருமுறை வரலாறு


"திருந்தா அமணர்தந் தீநெறிப்பட்டுத் திகைத்துமுத்தி

தருந்தா ளினேக்கே சரணம்புகுந்தேன் வரையெடுத்த பொருந்தா அரக்கன் உடல்நெரித்தாய் பாதிரிப்புலியூர் இருந்தாய் அடியேன் இனிப்பிற வாமல்வத் தேன்று

கொள்ளே ' (4-94-10) எனவரும் அப்பரடிகள் வேண்டுகோளும்,

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகிருர் பிறவாமை வேண்டும் ” எனக் காரைக்காலம்மையார் வேண்டிய நிலையினை விசித்துரைக்கும் திருத்தொண்டர் புராணச் செய்யுளும் இங்கே நினைக்கத்தக்கன. பிறவாமையாகிய பெரு நிலே வந்தெய்தியபின்னர் மேலும் வேண்டத்தக்கதொன் றிக்ல யாதலால், இவ்வாறு பிறிதெதனையும் வேண்டும் நிலையையும் விட்டொழிந்தேன் என்பார் பிற வாமை கேட்டொழித்தேன் என்ருர் சுந் த ர ர். இனி பிறவாமை கேட்டு அதனைப் பெறுதல்வேண்டி உலகப்பொருள்களில் வைத்த பற்ற இனத்தையும் விட் டொழிந்தேன் என்ருர் எனக் கொள்ளுதலும் பொருந் தும். இப்பொருட்கு கேட்டு-ஒழிந்தேன் எனப் பிரித்துரைக்க. அவா நீக்கமே பிறவாமைக்கு ஏது வென்பது,

  • வெதுத்தேன் மனேவாழ்க்கையை விட்டொழிந்தேன்

[7–4–8] என்பதஞலும் உணர்த்தப் பெற்றமை யுணரலாம்.

துய்மையாவது ஒரு பொருளிலும் அவாவில்லாமை யாகும். அகத்துய்மையாகிய அதுவும் வாய்மை யெனப்படும் மெய்ப்பொருளே இடைவிடாது சிந்தித் த லால் தானே உளதாகும் என்பார்,

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்

என்ருர் திருவள்ளுவர். மன அழுக்கைக் கழுவுதற் குரிய நன்னிராயமைந்து, மெய்மைப்பொருளாம் இறை