பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/855

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 837

செல்வ நெடுமாடஞ் சென்று சேணுேங்கிச் செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்அலச் சிற்றம்பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே 11-80-ல்:

எனவரும் திருப்பாடலில் ஆளுடைய பிள்ளையார் அறி இறுத்தியுள்ளார். செல்வன் கழலேத்தும் செல்வம் ” ஆகிய இச் செல்வம், இறைவன் திருவருளேப் பெது தற்கு வாயிலாகிய அருட் செல்வமும் செவிச் செல்வ மும் என இரு நிலை யினையும் ஒருங்கே பெற்றுச் சிறந்து விளங்குதல் உணர்ந்து மகிழத்தக்கதாகும்.

ஒழுக்கமுடைய உயர்ந்தோர் வாயிலிருந்து வெளி வரும் நல்லுரைகள், தளர்ச்சி நேர்ந்தபொழுது வழுக்கு நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் போன்று உதவு வன என்பது,

  • இழுக்க லுடையுழி ஊற்றுக்கோலற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல் '

என்பதல்ை உணர்த்தப்பட்டது. சீலமேயுருவாக விளங் கும் இறைவன், தன்னே அன்பினால் நினேந்து போற்றும் அடியார்களுக்கு உலகவாழ்வில் தளர்ச்சி நேர்ந்தால் வழுக்கு நிலத்தில் ஊன்றுகோல்போல் துணை நின்று தளர்வு நீக்கி ஏன்று தாங்கிக்கொள்வன் என்பதனை,

  • கூற்றுத் தண்டத்தை பஞ்சிக் குறிக்கொண்மின்

ஆற்றுத் தண்டத்தடக்கு மரனடி நீற்றுத் தண்டத்தராய் நினே வார்க்கெலாம் ஊற்றுத் தண்டொப்பர் போல் ஒற்றியூரரே 5-24-8)

என வரும் திருப்பாடலில் அப்பரடிகள் குறித்துள்ளார். இத் திருப்பாடல் இழுக்கலுடையுழியூற்றுக்கோலற்றே: சனவரும் திருக்குறள் உவமையினே அவ்வாறே எடுத் தாண்டிருத்தல் அறிக.