பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/856

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

838

பன்னிரு திருமுறை வரலாறு


அறிவு நூல்களிற் கூறப்பட்ட நற்பொருள்களைக் கேட்டுப் பழகாத செவிகள், தம் புலமாகிய ஓசையினேக் கேட்டுணரும் இயல்புடையனவாயினும் செவிட்டுச் செவிகளே ப் போன்று அறிவு வளர்ச்சிக்குச் சிறிதும் பயன்படாத னவே என் பார்,

கேட்பினுங் கேளாத்தகையவே கேள்வியாற் ருேட்கப் படாத செவி ’

என்ருர் திருவள்ளுவர். இதனை யூன்றி நோக்குங்கால், மக்கள் இன்றியமையாது கேட்டற்குரியனவாகத் திரு வள்ளுவர் அறிவுறுத்திய நூற் கேள்விகளுள் இறை வனது பொருள் சேர் புகழாகிய கேள்வி மிகவும் சிறந்த தென்பதும், அப்புகழினேக் கேட்டுப் பழகாத செவி களாற் பயனின்மையின் அவை செவிட்டுச் செவிகளே என்பதும் நன்கு தெளியப்படும். இக்கருத்தினே,

தாளால் அரக்கன்தோள் சாய்த்த தலைமகன்றன் நாள் ஆதிரையென்றே நம்பன்றன் நாமத்தால் ஆளானர் சென்றேத்தும் ஆமாத்துர் அம்மானைக் கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே (2-44-8) என்ற திருப்பாடலில் தெளிவாகக் குறித்துள்ளார்.

காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை மதம் எனக் குற்றங்கள் ஆறென்பர். இவ் வறுவகைக் குற்றங்களையும் அறவே களையவேண்டியதன் இன்றி யமை யாமையினே க் குற்றங்கடிதல்' என்ற அதிகாரத் தில் திருவள்ளுவர் விரித்துக் கூறுவர்.

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து ? f431}

  • இவறலும் மாண் பிறந்த மானமும் மான

உவகையும் ஏதம் இறைக்கு ’ [432]

எனவரும் இரண்டு பாட்டாலும் அறுவகைக் குற்றங் கன் இவையென உணர்த்தப்பட்டன. இவற்றுள்