பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/857

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 339

செருக்கு என்பது செல்வக்களிப்பாகிய மதம் என்னும் குற்றமாகும். சினம் - வெகுளி. சிறுமை - மக்களேச் சிறுமையுறுத்துவதாகிய அளவிறந்த காமம். இவறல் - பொருள்களைச் செலவு செய்ய வேண்டிய வழிச் செல விடாமையாகிய கடும்பற்றுள்ளம். இதனே லோபம் என்பர் வடநூலார். மாண்பு இறந்த மானம் - தன் பால் உண்மையான பெருமையில்லாத நிலேயில். அஃது இருப்பதாக மதித்துப் பணிதற்குரிய பெரியோர்களி டத்து அடங்கியொழுகாமை. மாணு உவகை-அள விறந்த மகிழ்ச்சி காரணமாகத் தான் செய்யத் தக்க கடமைகளை உரியகாலத்திற் செய்யாது சோர்வடை தல். இத்தகைய சேர்வு நிலே மயக்கத்தின் விளேவாக நேர்வதாதலின் இதனே 'மோகம்’ என வழங்குவர் வட நூலார் மேலே குறித்த அறுவகைக் குற்றங்களும் ஒழுக்கத்தால் மேன்மேல் உயர்தற்குரிய மனவுணர் வுடைய மக்களது வாழ்விற் குறுக்கிட்டு அன்னேர் அடைதற்குரிய நற்பயன்களேப் பெறவொட்டாது தடை விளேத்துத் துயர்செய்வன வாதலால் இக் குற்றங்களே "அற்றந் தரும் பகை' என்றர் திருவள்ளுவர். இதல்ை அறுவகைக் குற்றங்களேயும் அறுபகை’ என வழங்கும் மரபும் உளதாயிற்று, இவ்வறுபகையினேயும்,

பொங்குமத மானமே ஆர்வச்செற்றக்

குரோதமே லோபமே பொறையே ? [6–27-6]

எனத் திருநாவுக்கரசர் குறித்துள்ளமை காணலாம்.

பொறிவாயில் ஐந்தினேயும் அடக்கி இறைவனருள் பெற விரும்பும் மெய்யடியார்கள் அகப்பகையாகிய அறுவகைக் குற்றங்களே யும் கடிந்தகற்றித் தம் நெஞ்சத் தாமரையிலே இறைவனே இடைவிடாது நினைந்து வழி

படுவார்கள் என்பதனே,