பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/859

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 84?

பட்டது. இக்குறிப்பின யுணர்ந்து நன்னெறியிலொழுக மாட்டாது, குற்றங்களேயே பெருக்கிக் குணங்களைக் குறைத்துத் தீய நெறியில் தலைப்படும் புன்மக்களை .ே நா க் கி இடித்துரைத்து நல்வழிப்படுத்துவதாக அமைந்தது,

' குற்றங் கூடிக் குனம்பல கூடாதீர்

மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம் புற்றரா வினன் பூவனூர் ஈசன்பேர் கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே ’ I5–6.53]

என வரும் திருக்குறுந்தொகையாகும்.

உரியகாலத்தில் வேண்டும் அளவு மழைபெய்தால் தான் உலகத்து உயிர்களெல்லாம் நிலேபெற்று வாழ முடியும். இவ்வாறு உயிர் வாழ்வுக்கு மழையொன்றே காரணமாயினும் சிறப்புடையுயிராகிய குடிமக்கள் அர சனது நீதி முறையாகிய செங்கோலினேயே தம் வாழ் வுக்கு ஆதரவாகக் கொண்டு வாழ்கின்ருர்கள். இவ் வுண்மை,

வாளுேக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி ?

என்பதல்ை உணர்த்தப்பட்டது. இவ்வாறு மக்கள் வாழ்வுக்கு உறுதுணையாய் நின்றுதவும் மன்னனது செங்கோன் முறைமைக்கும் உடனுய்த் துணை நின்று மன்னுயிர்களேக் காப்பது இறைவனது திருவருளே யாகும். இந்நுட்பத்தினே,

  • குழைக்கும் பயிர்க்கோர் புயலேயொத்தியால்

அடியார் தமக்கோர் குடியேயொத்தியால் (7-4-4)

எனச் சுந்தரர் இறைவனேப் போற்று முகத்தால் நன்கு புலப்படுத்தியுள்ளார்,