பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

பன்னிரு திருமுறை வரலாறு


வெருட்சியும் வியப்பும் உடையராய், இருகைகளேயும் தலைமேற் குவித்துத் தொழுது, தம் மகளுர் பாடியரு ளும் இனிய அகப்பொருட்டுறை வாய்ந்த செந் தமிழ்ப் பாடல்களின் குறிப்பினே யுணர் வாராகித் தம் அருந் தவப் புதல் வரைப் போன்று இறைவனது திருவுருவுரு வினேத் தாம் முழுதுங் காணப்பெற்றிலா ராயினும் அப் பெருமானருளால் தம் புதல்வர்க்குண்டாகிய சிவஞா னப் பெருக்கின் விளைவுகளே நேரிற் காணப்பெற்ரு ராத வின், வியப்புடைய இந்நிகழ்ச்சி பிரமாபுரமேவிய பெம்மானது திருவருளெனவே துணிந்து ஆளுடைய பிள்ளே யாரைத் தொடர்ந்து பின்சென் ருர். முன்னே சென்ற பிள்ளேயார், தோணி புரத் திருக்கோயிலே யடைந்து அங்கு எழுந்தருளிய இறைவன் திருமுன்னர் நின்று " இங்கு எனே ஆளுடையான் உமையாளோடும் எழுந்தருளியிருக்கின்ருன்’ எனப் பரவிப்போற்றினர். இவ்வியப்புடைய நிகழ்ச்சியை யறிந்த அருமறையந்த னர்களும் புகலி நகர மாந்தரும் இதற்கு ஒப்பாகிய அற்புதம் வேறு எங்கே நிகழ்ந்துள்ளது” என்று சொல் லிக்கொண்டு திருத்தோணி புரத் திருக்கோயிலே யடைந்து நிலமிசை வீழ்ந்து திருஞான சம்பந்தப் பிள்ளேயார் திருவடிகளே வணங்கிப் போற்றினர்கள். தந்தையார் சிவபாத விருதயர், தம் அருந்தவப் புதல் வராகிய ஆளுடைய பிள்ளே யாரைத் தம் தோளின் மேல் அமர்த்திக்கொண்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க அந்தணர்கள் அருமறை முழக்கஞ் செய்யச் சிவனடியார்கள் போற்றச் சீகாழிப் பதியை வலஞ் செய்து தமது திருமாளிகையை யடைந்தார்.

திருஞானசம்பந்தப் பெருமான் மூன்று வயதி .ே ல யே உமையம்மையாரளித்த ஞானப்பாலடி சிலுண்டு தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொரு ளாகும் தாவில் தனிச் சிவஞானசம்பந்தராயினர் என்ற இவ் வரலாறு, உலகத்தார்க்குப் பெருவியப்பைத் தரக்