பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/861

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 843

  • ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனுெளி

வெள்ளியானுறை வேற்காடு உள்ளியார் உயர்ந்தாரில் வுலகினில் தெள்ளியாரவர் தேவரே' [1–57-1}

என வும்,

  • முள்ளின் மேல் முதுகூகை முரலுஞ் சோலே

வெள்ளின்மேல் விடுகூறைக் கொடிவிளேந்த கள்ளில் மேய அண்ணல் கழல் நாளும் உள்ளுமேல் உயர் வெய்தல் ஒருதலையே ’ [1-119-1}

எனவும் வரும் திருப்பாடல்களாகும். ஆளுடைய பிள்ளை யார் அருளிய இப்பாடல்கள் உள்ளுவதெல் லாம் உயர்வுள்ளல் ? என்னும் திருக்குறட்கு விளக்க மாக அமைந்தனவாகும்.

சோம்புதலில்லாத மன்னவன், தன் அடியளவால் உலக முழுவதையும் அளந்த திருமால் தாண்டிக்கடந்த நிலப்பரப்பு முழுவதனையும் ஒருங்கே எய்தும் ஆற்றலேப் பெறுவான் என்பார்,

  • மடியிலா மன்னவன் எய்தும், அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு” [610 |

என்ருர் திருவள்ளுவர். திருமால், மாவலி என்னும் வேந்தனிடத்தே மூன்றடி மண் இரந்து வேண்டி நெடி யோனுய் நின்று இவ்வுலக முழுவதனையும் தன் திருப் பாதத்து ஒரடியால் தாவி அளந்தமை பற்றி அப் பெருமானத் தாவியவன்' (1-62-6) என்ற பெயராற் குறித்தார் ஞானசம்பந்தர். திருமால் தன் பாதத்தால் தாவியளந்த இந் நிகழ்ச்சியை,

  • மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகைமுடியத்

தாவிய சேவடி ’ சிலப்.ஆய்ச்சியர் குரவை)

என்ற தொடரில் இளங்கோவடிகள் குறித்துள்ளார்.