பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/862

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

844

பன்னிரு திருமுறை வரலாறு


மடியிலா மன்னவன் தன் முயற்சியால் எய்தும் நிலப்பரப்பின் பெருமையைச் சுட்டக் கருதிய திரு வள்ளுவர், திருமாலின் அடியால் அளக்கப் பெற்ற பெருநிலப்பரப்பின அடியளந்தான் தாஅயது' எனக் குறித்தார். உலகளந்த நெடியோனுகிய திருமாலின் பேராற்றலேக் கு றி ப் பி ட க் கருதிய ஆளுடைய பிள் ஆளயார்.

'தாய அடியளந்தான்’ [1-59-9]

எனவும்,

" தாவி அடிமூன்றளந்தவன் ’ [2-121-9)

எனவும் திருமாலைச் சிறப்பித்துள்ளார். இத்தொடர்கள் அடியளந்தான் தாஅயது என்னும் திருவள்ளுவர் வாய் மொ ழி ைய அடியொற்றி யமைந்திருத்தல் காணலாம்.

எல்லார்க்கும் வேண்டுவனவற்றைஇ ல்லேயென் துை கொடுத்து உபகாரஞ் செய்தலாகிய வேளாண் மைப் பண் பு இடைவிடாத மெய்ம்முயற்சியாகிய தாளாண்மை என்னும் குணத்தின் கண்ணே நிலேத் துள்ளது என்பதனே,

தாளாண்மை யென்னுந் தகமைக்கட் டங்கிற்றே வேளாண்மை யென்னுஞ் செருக்கு ’

என்ற குறளில் ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிடுகின் ருர், சோழநாட்டுத் திருப்பதிகளுள் ஒ ன் ரு கி ய திரு ஆக்கூரில் வாழும் பெருமக்கள் இத்திருக்குறளுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்ருர்கள் என அன்னேரது தாளாண்மையின் வழி நிகழும் வேளாண் மையினைச் சிறப்பிக்கும் முறையில் அமைந்தது.