பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/864

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846

பன்னிரு திருமுறை வரலாறு


என்ற குறளால் உணர்த்தியுள்ளார். திரு ஓமாம்புலி யூரில் வாழும் பெருமக்களது வினைத்துாய்மையினையும் குடிபிறப்பின் உயர்ச்சியினையும் கண்டு மகிழ்ந்த ஆளுடைய பிள்ளே யார்,

சலத்தினுற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்

தன்மையார், நன்மையால் விக்க உலப்பில் பல்புகழார் ஒமமாம் புலியூர்

உடையவர் வடதளியதுவே ' {3–122–51

என அப்பெருமக்களே உளமுவந்து பாராட்டியுள்ளார். இத்தொடர் மேலே குறித்த திருக்குறட் பாடல்கள் இரண்டின் பொருளையும் அடியொற்றி அமைந்ததாகும்.

அன்பு, நாண், ஒப்புரவு, கண்ைேட்டம், வாய்மை முதலிய பல குணங்களாலும் நிறைந்து, அப்பண்புகளே உலகவாழ்க்கையிற் பயன்படுத்தும் நன்மக்களது இயல் பினேச் சான்ருண்மை என்னும் அதிகாரத்தில் விளக்குவர் ஆசிரியர்.சால்புடைமையாகிய பெருங்கடல் நீரைத் தேக்கிவைக்கும் கரையென்று சொல்லப்படும் சான்றேர், புறத்தேயுள்ள பெருங்கடலானது கரையுள் நில்லாமற் பொங்கி மீதுளர்ந்து உலகமெலாம் அழிய வரும் ஊழிக்காலத்தும் பெருங்குணங்களேக் காத்த லாகிய தம்மியல்பினின்றும் சிறிதும் திரிபடைய மாட்டார்கள் என்பது,

  • ஊழி பெயரினுந் தாம்பேரார் சான்ருண்மைக்கு

ஆழியெனப் படுவார் . [9897

என்பதல்ை உணர்த்தப்பட்டது. சான்ருண்மையாகிய இவ்வியல்பு, என்றும் அழிவிலா முழுமுதற் பொருளாகிய இறைவனுக்கு ஆட்பட்டு அவனது திருவருளேயே துணை யாகக் கொண்டு வாழும் உத்தமர்களாகிய அடியார்க ளிடத்திலேயே என்றும் மாருது திகழும் என்பதனே,