பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/866

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தேவசர ஆசிரியர்கள் அறிவுறுத்திய திருநெறிக்கொள்கைகள்

சிவநெறி வளர்த்த செந்தமிழ்ச் செல்வர்களுள் திருஞானசம்பந்தர், தி ரு நா வு க் க ர ச ர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சைவசமய ஆசிரியர் எனச் சிறப்பித்துப் போற்றுதல் மரபு. சைவ சமய குரவராகிய இந்நால்வரும் இறைவனருளால் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய அருள்ஞானம் கைவரப்பெற்ற திருநெறிச் செல்வர்கள் ஆவர். இப்பெருமக்களைப் பண்டை நற்றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும் தொண்டர்’ என்றும், சிவாகமங்களில் கூறப்பட்ட படிமுறையால் அன்றி இறைவன் தானே எளிவந்து இவர்களே ஆட் கொண்டு சிவகதியிற் சேர்த்தருளினன் என்றும் மெய்ந் நூல்கள் கூறும்.

எல்லா உலகங்களிலும் எந்த ஏதுவிலேயாலுைம் நடைபெற்றுவரும் செயல்கள் யாவும் எங்கும் நீக்கமறப் பொருந்தியிருக்கும் இறைவனுடைய திருவருள் ஆணே யால் நிகழ்வனவேயாம். ஆதலின், உணர்வில்லாத சடப்பொருள்கள், உணர்த்த உணரும் இயல்பினவாகிய உயிர்கள் ஆகிய இருதிறப் பொருள்களுக்கும் அவற்றுக் கெனத் தனியே ஒரு செயல் இல்லை என்பர் பெரியோர். இவ்வுண்மையினே உணர்ந்தவர்களே சிவஞானிகள் எனப் போற்றப் பெறுவர். அன்னேர் தாங்கள் எந்தச் செயலேச் செய்யத் தொடங்கினுலும் யான் செய்தேன் * பிறர் செய்தார் ? என்னும் மனக்கோணேயினைச் சிவஞானமாகிய தீயினல் வாட்டி நிமிர்த்து மகவெனப் பல்லுயிரனத்தையும் ஒக்கப்பார்க்கும் செம்மையுடைய ராய்த் தன் முனைப்பு அடங்கி எல்லாம் இறைவன் செயல்' என எண்ணி அவன் அருள் வழி ஒழுகும் இயல்பினர் ஆவர். அப்பெருமக்கள் முழுமுதற் கடவு