பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/867

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 849 ளாகிய சிவபெருமா இனத் தனக்குவமையில்லாத் தனி முதல்வனுகவும் தம்மை அம்முதல்வனது அடிமை' வும் கருதித் தம்மின் வேறுபடவைத்துத் தியானித்த லும், அப்பெருமானது எல்லையற்ற பேராற்றலே நோக்கக் தமக்கென்று ஒருசெயல் இல்லாமையால் தான் என் ருெரு முதலற அவனது அருளில் அடங்கி ஒன்ருசிக் தம்மை மறத்தலும், இவ் இருதிறமும் விளங்க அவன் திருவருள் வழி உடய்ை நின்று ஒற்றித்துணர்தலும் ஆகிய மூன்று திறத்தாலும் சுட்டற நின்று வழிபட்டு உய்வார்கள். இந் நுட்பம்,

' செய்யும் செயலே செயலாகச் சென்று தமைப்

பையக் கொடுத்தார் பரங் கெட்டார் ’ ’ என வும்,

' யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும் மாதேயும் பாகன் இலச்சினையே - ஆதலினல் பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய் பேதாபேதம் செய்வாய் பின்

எனவும் வருவனவற்ருல் இனிது புலம்ை. இவ்வாறு ஆன்ம போதம் கெட, எல்லாம் வல்ல இறைவனேத் தியானிக்கும் இயல்புடைய பெரியோர்கள், இவ்வுலக வாழ்வில் கருவி கர ணச் சேட்டைகளின் நீங்கிச் சிவபரம் பொருளின் அருட்செயலே தம்பால் விளங்கப் பெற்றுத் திகழும் தூய நிலை சீவன் மூத்தி நிலே எனப் படும். இங்ங்னம் பசு கரணங்கள்ெள் லாம் பதி கரணங் களாகப் பெற்ற செம்புலச் செல்வர்களாகிய இப்பெரு மக்களேக் காணும் கரணங்க ளெல்லாம் பேரின்பம் எனப் பேணும் அடியார் எனப் போற்றுவர் பெரியோர்.

  • -*--

2 岁3 - 82

1. திருக்களிற்றுப்படியார் - 21

3. திருவாசகம் பண்டாய நான்மறை-6.