பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/868

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

850

பன்னிரு திருமுறை வரலாறு


இவ்வாறு தம் செயல் என்பது ஒன்றின்றி ஆன்ம போதம் நீங்கிச் சித்தம் சிவமாகப் பெற்ற மெய்யடியார் கள் இவ்வுலகில் செய்யும் செயல் அனேத்தும் தவச் செயலாம் என்பதும், இறைவன் அவற்றைத் தன் செய லாகவே ஏன்றுகொண்டு அவரோடு ஒட்டி உடய்ை நின்று அருள்புரிவான் என்பதும்,

“ எனதுரை தனதுரையாக '

எனவும்,

' உயிராவண மீருத்து உற்று நோக்கி உள்ளக்கிழியின்

உருவெழுதி உயிராவனஞ் செய்திட்டுன்கைத்தந்தா

ருணரப் படுவாரோடுஒட்டிவாழ்தி eாக இம்,

தொடர்ந்தென் சிந்தைத் தன்னுருவைத் தந்தவனே .

எனவும்,

  • சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் ?

(திருவாசகம் 320) எனவும்.

நஞ் செயலற்றிந்த நாமற்றபின் நாதன் தன் செயல் தானேனன் றுந்தீபற தன்னேயே தந்தான்னன் றுந்தீபற (t)

எனவும் வரும் அனுபவ மொழிகளால் நன்கு விளங்கும்.

இவ்வாறு சித்தஞ் சிவமாகப் பெற்ற மெய்யடியார் கள் செம்பொருளாகிய சிவத்தை இடைவிடாது சிந் திப்பதல்லது உலகியற் பொருள்களே நாடுவார் அல்லர். அவர்களுடைய உள்ளம், உரை, செயல்கள் யாவும் உலகியலிற் பொருந்தி நிற்கும் இடத்தும் இறைவன் திருவருள் வழியே இயங்கிப் பிற உயிர்களே!பும் நன் னெறிப்படுத்தும் இயல்பினவாகும். ஆற்றின் வழி