பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/878

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

860

பன்னிரு திருமுறை வரலாறு


ஐவகையால் நினேவார்பால் அமர்ந்து தோன்றும்

[6-18

எனவரும் அப்பர் அருள் மொழி இங்குச் சிந்திக்கத் தக்கதாகும்.

- மேற்குறித்த நால்வகை நெறிகளுள் தாதமார்க் கத்து இயல்பு திருநாவுக்கரசரிடத்தும், சற்புத்திர மார்க்கத்து இயல்பு திருஞானசம்பந்தரிடத்தும், சக மார்க்கத்து இயல்பு நம்பியாரூரர் இடத்தும், சன்மார்க்கத்திறம் ம | ணி க் க வ | ச க ர் இடத்தும் அன்னுேர்தம் வரலாற்று நிகழ்ச்சிகளில் வெளிப்பட்டு விளங்குதல் காணலாம்.

சரியை வழி நின்றவர் அப்பர் என்றும், கிரியை வழி நின்றவர் சம்பந்தர் என்றும், யோகநெறி நின் றவர் சுந்தரர் என்றும், ஞானநெறி நின்றவர் மாணிக்க வாசகர் என்றும் கூறுதல் உண்டு. ஆயினும் சமய குரவராகிய இந் நால்வரும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவ ஞானம் கைவரப் பெற்று முதிர்ந்த ஞான நெறியில் நின்ற செம்புலச் செல்வர்கள் என்பதே சேக்கிழார் முதலிய முன்னேய அருளாசிரியர்களின் துணிபாம். இப்பெருமக்களைப் பண்டை நற்றவத்தால் தோன் றிப் பரமனப் பத்தி பண்ணும் தொண்டர் என்றும் இவர் களே இறைவன் சிவாகமங்களிற் சொல்லிய படிமுறை யான் அன்றித் தனது எ ல்லேயற்ற பேரருளால் தானே எளி வந்து ஆட்கொண்டு தூய கதியாய வீடுபேற்றின் கண் சேர்த்து அருளினன் என்றும் அறிவனுால் கூறும்.

சிவனை வழிபடும் கூட்டத்தார் யாவரும் சைவர் என அழைக்கப்பட்ட காலம் தேவார ஆசிரியர் காலத் திற்குச் சிறிது முற்பட்டதாயிருக்கலாம். ஆயின் பண் டைத் தமிழர் வழிபட்ட செம்பொருளாஞ் சிவத்திற்குச்