பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/879

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 器份夏

சங்க காலத்தும் அதற்கு முன்னரும் இறையோன், கடவுள், பெரியோன் என்ற பெயர்களே பல்கி வழங் கின எனத் தெரிகிறது. நுதல்விழி நாட்டத்து இறை யோன் ' என மணிமேகலையிலும் கடவுள் எனப் புறத்திலும் பிறவா யாக்கைப் பெரியோன் எனச் சிலப்பதிகாரத்திலும் ப யி ன் று வருதல் நோக்கத் தக்கது. செம்மை - நடுவு நிலேமை, நேர்மை என்னும் பொருள் தரும் செந்தமிழ்ச் சொல். செம்பொருள் என்னும் சொல்லால் வள்ளுவனுர் மெய்ப்பொருளாகிய இறைவனேக் குறித்தமையும் சிந்திக்கற்பாலது.

'கரைந்து கைதொழுவாரையும் காதலன் வரைந்து வைதெழுவாரையும் வாடல ன் எனத் தேவாரம் நுதலியாங்கு, தன்னே வழிபட்டோ ரையும் ைவதெழுவோரையும் ஒப்ப மதித்து இன்னருள் புரியும் இயல்பினன் இறைவனவன். இறைவனே " வேண்டுதல் வேண்டாமையிலான் எனப்போற்றிய திருவள்ளுவர், விருப்பு வெறுப்பு இல்லா நிலே ைமக் கேற்ப அம்முதல்வனே ச் செம்பொருள் (நடுவு நிலே யுள்ள பொருள்) எனச் சிறப்பித்தமை பொருந்துவதே யாம். தமிழர்கள், இறைவனே ஒளி உருவினகைப் போற்றியுள்ளார்கள். காலேயில் பொன்னே உருக்கி வார்த்தால் என வேலேமீது எழும் செஞ்ஞாயிற்றினை முருகன் சேயொளிக்கு ஒப்பாக முருகாற்றுப்படை கூறு தலும், கதிரவன் தன் உருமவேலேயின் வெய்யஒளியை விட்டு உயிர்களின் உடலுக்கெல்லாம் நல்லொளி பரப் புங் காலமாகிய மாலைக்காலத்து வான் முழுவதும் பரவி மீது எழுந்த செக்கர் ஒளியினைச் சிவபிரானின் திரு மேனி ஒளியோடு ஒப்பவைத்து உரைக்கப்போந்த பெருந்தேவனர் என்னும் புலவர்,

" செவ்வான் அன்னமேனி......அந்தணன் ' என உவமித்துப் போற்றுதலும், சிவந்த ஒளியில் இறைவன் திருமேனியின் எண்ணிப் போற்றும் அக்