பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

பன்னிரு திருமுறை வரலாறு


மிழ்ப்பாண்டிநாட்டிற் சிவநெறியைப் பரப்புதல் கருதி மதுரைக்குச் சென்ற திருஞானசம்பந்தப் பெருமான், சமணர்களே வா தில்வென்று பாண்டியனது கூனே நிமிர்த்துச் சிவனடியார்களுடன் அளவளாவி யமர்ந் திருக்கின்றர். அந்நிலையில் அவரைக் காணவேண்டு மென்னும் பேரார்வத்தால் அவருடைய தந்தையார் சிவபாதவிருதயர் சீகாழிப்பதியிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து பிள்ளை யாரைக் காண்கின் ருர். தந்தையாரைக்கண்ட ச ம் ப ந் த ர், சீகாழிப்பதியி லெழுந்ததருளிய இறைவனது நலத்தினை வினவும் திலேயில் மண்ணி ன லல்லவண்ணம்’ என்ற திருப்பதிகத் தைப்பாடுகின் ருர், அருந் தவத் தீர் எனக்கு வினவு தெரி யாத இளம்பருவத்திலே எழுந்தருளி வந்து அழகிய பொற்கிண்ணத்திலே பாலடிசிலே யூட்டியருளி, அங் வடிசில் பொல்லாதென்று கூறித் தந்தையார் வெகு ளும்படி என்ன ஆட்கொண்டருளிய பிரமபுரத்து இறைவணுகிய பெருந்தகை, எம் பெருமாட்டியுடன் கழுமல வளநகரில் இனிது எழுந்தருளியிருக்கின்றதா? எனத் தம் தந்தையாரை நோக்கி வினவுவதாக அமைந்தது,

போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத் தாதையார் முனிவுறத் தானென யாண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே. என வரும் திருப்பாட்டாகும். உருவறியாப் பருவத்தே இறைவன் அம்மையப்பகை எழுந்தருளி வந்து தமக்கு ஞானப்பா லளித்து ஆட்கொண்டருளினமையும், அதனே யுணரப்பெருத நிலையில் தம் தந்தையார் தம்மை வெகுண்டுரைத்தமையும் ஆகிய நிகழ்ச்சி யினைப் பிள்ளையார் இத்திருப்பாடலில் தெளிவாகக் கூறுதல் காணலாம். அன்றியும் இளம்பருவத்தே இறைவன் அம்மையப்பராகத் தோன்றித் தம்மை