பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/880

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862

பன்னிரு திருமுறை வரலாறு


காலத்தார்தம் இயல்பினே நன்கு புலப் படுத்து வதாகும். இ ங் கடன ம் இறை வகைச் சிவந்த திரு. மேனி யொளியினனுக எண்ணிப் போற்றிய நம் முன்ைேர்கள் அம்முதல் வனேச் செம்மேனியான் என்ற கருத்தில் சிவன் என் லும் பேரால் அழைப்பார் ஆயினர். ‘சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான் ” எனப் போற்றினர் திருநாவுக் கரசடிகள். செம்மேனி உடைமை காரணமாகச் சிவன் எனும் திருபெயரினத் தனக்கே உரியதாகப் பெற்றவன் என்பது இத் தொடரின் பொருளாம். எனவே இறை வலுக்கு வழங்கும் சிவன் என்னும் பெயர் செம்மை நிறம் பற்றி வந்தசெந்தமிழ்ப்பெயரென்பது நன்குபெறப் படும். இறைனைச் சிவன் என்ற பெயராற் போற்ற விரும்பிய காரைக்காலம்மையார், அத்திருப்பெயரை அவ்வாறே உரையாது செம்மேனிப் பேராளன், வானுேர் பிரான்’ எனக் குறித்துள்ளமை சிந்தித்து அறியத்தக்கது.

சிவன் என்ற செந் தமிழ்ப் பெயரை அடிப்படை யாகக் கொண்டே அதனுேடு வடமொழி நான்காம் வேற்றுமையுருபையும் வணக்கச் சொல்லையும் சேர்த்து ஐந்தெழுத்துச் சொல்லாகக் கொண்ட பெரியேர்கள், அதனே மந்திரமாகப் போற்றினர்கள். நிறைமொழி மாந்தர் மறைமொழி ஆகிய இம்மந்திரத்தினத் தேவார ஆசிரியர் மூவரும் நமச்சிவாயத் திருப்பதிகம, பஞ்சாக்கரத் திருப்பதிகம் முதலிய பதிகங்களிலும் தொடர்ந்து போற்றியுள்ளார்கள்.

இனி, இவர்களால் வழிபடப்பெறும் இறை இயல் பினே த் தேவாரப் பாடல்கள்கொண்டே நோக்குதல் சிறந்ததாம். இறைவன் உருவுடையன் அல்லது உரு வற்றவன், அன்றி இருநிலையும் ஒருங்கு உடையோன், என இவ்வாறு தம்முள்முரணி இறைவனது இயல்பு உ ாைப்ப ை விட்டு, இறைவன் எல்லாமாய் அல்லது