பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/882

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

864

பன்னிரு திருமுறை வரலாறு


வள்ளுவர் மொழியானும் "ஞானத்திரளாய் நின்ற பெரு மான்’ என்ற பிள்ளையார் திருவாக்கானும் "ஞான த் தாய்’ என நாவுக்கரசர் இறைவனே அழைத்துப் போற்றுதலானும் நன்கு விளங்கும். இறைவன் பேரறி வில் நிலைத்துள்ள வன் என்பதற்கு அறிகுறியாகவே சைவர்கள், நல்லுனர் வினே இடபமாக உருவகித்து அவ்வேற்றினேச் சிவபெருமானது ஊர்தியாகப்போற்றிப் பரவுகின் ருர்கள்.

'உணர்வென்னும் ஊர்வது உடையாய் போற்றி

(6–57–6)

என்பது திருக்கயிலாயத் திருத்தாண்டகம்.

இங்ங்னம் பேரறிவின் உருவாய் விளங்கும் இறை வன், உயிர்கட்கு அருள் செய்யவேண்டி அன்பு ருவின ய்ை அம்மையப்பனுகி அருள் திருமேனி கொண்டு ஆட்கொள்வன் என்பது,

'தாயும் தந்தை பல்லுயிர்க்கும் தாமே யாய தலைவனர்'

ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கி” 'மலேமகள் பாகமாக அருள் காரணத்தின் வருவார்’

என வரும் திருஞானசம்பந்தர் பாடல் தொடர்களால் நன்கு புலனுகும்.

இறைவன் உலகுயிர்களோடும் ஒன்ருய் வேருய் உடய்ை நிற்கும் உண்மையினை

ஈருய் முதலொன்ருயிரு பெண்ணுண்குண மூன்ருய் மாருமறை நான்காய் வருபூதம்மவை ஐந்தாய் ஆருச் சுவை யேழோசையோ டெட்டுத் திசைதாளுய் வேருய் உடைைனிடம் விழிம் மிழலேயே’’

என வரும் திருப்பாடலில் ஞானசம்பந்தர் விளக்கியருள் கின் ருர், இத்திருப்பாடற் பொருளே யடியொற்றியது,