பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/887

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 869

“உரிமையுடை அடியார்கள் உள்ளுற உள்க வல்லார்கட்கு அருமையுடையன காட்டி யருள்செயும் ஆதி முதல்வர்”

என ஞானசம்பந்தரும்,

“......அன்பர்க்குக் காணு காட்டும்

கண்ணுங் கருகாவூரெந்தை தானே’’

என நாவுக்கரசரும் அறிவுறுத்தினமை கண்டு அதளிய லாம்.

இனி, தேவார ஆசிரியர்கள் தம்மால் (உயிரால்) ஆவது ஒன்றும் இல்லே, எல்லாம் இறைவன் செயல்’ என்னும் இவ்வுண்மையைத் தம் வாழ்க்கை முழுவதும் மறவாது நினைந்து, குற்றம் உடையனவற்றைக் தம் அறியாமையின் விளைவெனக் கொண்டும், அருமை il | 6D L– LL! நற்செயல்களை எல்லாம் இறைவர்தம் திரு வருட் செயலெனக் கொண்டும் வழுத்தும் உள்ளம் உடையார் ஆவர். பாண்டிமாதேவியாரின் மங்கல நானே ப் பாதுகாக்கும் கருத்தோடு தீப்பிணியைப் * பையவே சென்று பாண்டியற்காக’ எனப் பணித்த ஞானசம்பந்தப்பிள்ளையார், பின்னர், தாம் பாண்டி யனின் வெப்பு அகற்றி மங்கையர்க்கரசியாரின் மங்கல நானே நல்கியவராய் இருந்தும், உலகம் போற்றும் அச்செயலேத் தமதெனக் கொள்ளாமல் எல்லாம் முந்த னுடைச் செயல். எனவே நினைத்தொழுக’ என்றபடி அதனே இறைவன் பாற்படுத்தி மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே, மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே’ எனப் போற்றுகின்ருர். இவ்வாறே திருநாவுக்கரகரசரும் தம்மைச் சமணத்திற் சேர்த் ததும் மீண்டும், சைவத்திற்குத் திருப்பியதும் இறை வன் செயல்களேயெனவும் அவனது கட்டள்ையை மீறில்ை அடித்து அடக்குபவனும் அவ் இறைவனே எனவும் உலக மக்களுக்கு அறிவுறுத்துகின்ருர்.