பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/894

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876

பன்னிரு திருமுறை வரலாறு


.ெ ந ஞ் சு ரு கி இறைவனிடத்து முறையிடுவராயின், அருளாளனுகிய இ ைற வ ன், அன்ைேரது முறை யீட்டுக்கு உளமிரங்கி அவர்தம் வஞ்சனே முதலாகிய குற்றங்களே நீக்கி யருள்புரியான் 1 ன்பது,

'நெஞ்சம் இது கண்டு கொள் உனக்கென நினைந்தார் வஞ்சம தறுத்தருளும் மைந்தன்” I2–33–5]

என வரும் தொடராற் புலம்ை.

உள்ளங்கசிந்து வழிபடும் அடியார்களே ஊழ்வின முதலியன பற்ருவாறு இறைவன் காத்தருள்வான் என் பதனே

'வந்தித்து இருக்கும் அடியார்தங்கள் வருமேல்

வி ையோடு பந்தித்து இருந்த பாவந்தீர்க்கும் பரமர்' 'அடியார்மேல் எண்ணில் வினே காேவான்'

  • ஒருவனுர் அடியாரை ஊழ்வினே தலியவொட்டாரே'

என வரும் அடிகளால் ஆளுடைய பிள்ளையார் அறிவித் தருளினர். முன் செய்த தீவினைப்பயணுகிய பாவங் களே ப் போக்க வேண்டுமால்ை இறைவனை நெஞ்சம் நெக்குருகி வாழ்த்துதலே செய்யத்தக்கது என்பதனை,

'முன்னே நான் செய்த பாவம் முத்லறப்

பின்னே நான் பெரிதும் அருள் பெற்றதும் அன்னமார் வயற்கோழம்பத் துள்ளமர் பின்னல் வார்சடையானப் பிதற்றியே" [5-64–7]

என வரும் திருப்பாடலில் திருநாவுக்கரசர் தம் அது பவத்தின் வாயிலாக எடுத்துக்காட்டி விளக்கியுள்ள சர்.

தேவார ஆசிரியர்கள் கடவுள் ஒன்றையே உள் பொருளாகக் கொண்டனர் எனவும், அவர்கள் பாடிய திருப்பதிகங்களில் மும்மலம் என்ற தொகையினேக் குறிக்காது போ த ல ல் ஆணவமலமென்பது