பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பன்னிரு திருமுறை வரலாறு

ஒரு சிறிதுங் கலங்காத மனவுறுதி யுடையவர்கள். இவர்களுக்கு இவ்வுறுதியை வழங்க வல்ல பேரரு ளாளன், முழு முதற்பொருளாகிய இறைவனுெருவனே யாவன். திருவாள கிைய அப்பெருமான் தோன் ருத் துணேயாய் நின்று தன் அடியார்களுக்கு வழங்கும் துளக்கமிலா மனச்செம்மையாகிய இத் தெளிவினையே திருநின்ற செம்மை யெனப் போற்றுவர் சான்ருேர்."

சென்றடையாத திருவுடையானகிய முழுமுதற் கடவுளே வழிபட்டு, அப்பெருமானது திருவருள் வழி யொழுகும் மெய்யடியார்கள் " நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்னும் அருள் நோக்கத் துடன் இறைவனது திருவருளேயே கண்ணுகக் கொண்டு தம் அனுபவத்தாற் கண்டுணர்ந்த நல் லொழுக்க நெறியினே எல்லா மக்களுக்கும் அறிவுறுத்தி உலகத்தை நல்வழிப்படுத்துவர். பொறி வாயில் ஐந்து அவித்தாளுகிய இறைவன் அருளிய மெய்யான ஒழுக்க நெறியில் நிலைபெற்ருெழுகுதல் இப்பெரியோரது இயல் பாகும். இவ்வாறு இறைவன் திருவருளேயே பற்றுக் .ே கா டா க க் கொண்டொழுகும் இப்பெரியோரது வாழ்க்கைமுறை, சிந்தையின் நிறைவாகிய பெருஞ் செல்வத்தை எல்லோர்க்கும் வழங்குஞ் சிறப்புடைய தாதலின், இதனேத் திருநெறியென வழங்குவர் பெரியோர்,

தமிழ் மக்களது தவப்பயணுகத் தமிழ் நாட்டிலே தோன்றி எல்லாம்வல்ல இறைவனது திருவருளால் இத்தகைய திருநெறியினே வகுத்தருளிய சான்ருேர் : திருமூலர், காரைக்காலம்மையார், திருஞானசம் பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், திருவாத ஆரடிகள், திருவெண்காட்டடிகள், நம்பியாண்டார் நம்பி, திருமாளிகைத்தேவர் முதலிய திருவிசைப்பா

1. திருத்தொண்டத் தொகை, 4-ம் திருப்பாடல். 2. திருமந்திரம் 85-ம் திருப்பாட்டு.