பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

பன்னிரு திருமுறை வரலாறு


புரத்திறைவன் அம்மையொடும் தோன்றி அருள் புரிந்த திறத்தை,

தாதையொடு வந்த வேதியச் சிறுவன் தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த அன்னேயோவென்றழைப்ப முன்னின்று ஞானபோனகத் தருள் அட்டிக் குழைந்த ஆளுத் திரளே யவன்வயின் அருள அந்தணன் முனிந்து தந்தார் யாரென அவனேக் காட்டுவன் அப்ப வானர் தோடுடைய செவியனென்றும் பீடுடைய பெம்மா னென்றும் கையிற் சுட்டிக் காட்ட ஐயநீ வெளிப்பட்டருளினே யாங்கே,

எனத் திருக்கழுமலமும்மணிக் கோவையில் விரித் து ைரத்துப் போற்றியுள்ளார். தளர்நடைப் பருவத் தின ராகிய ஆளுடைய பிள்ளே யார், தம் தந்தையாரைத் தொடர்ந்து சென்று வளர்பசி வருத்த அன்னயோ என அழைத்து அழுத நிலையில், அம்மையப்பனகிய இறை வன் எழுந்தருளி வந்து ஞானபோன கத்தினே அருத்தி யருள அதனே நுகர்ந்து மகிழ்ந்த ஞான சம்பந்தப் பிள்ளையார், தந்தார் யார்’ என்று தம்மை முனிந்த சிவபாதவிருதயரை நோக்கித் தோடுடைய செவிய னென்றும் பீடுடைய பெம்மானென்றும் அடையாளங் களுடன் கையினுற் சுட்டிக்காட்ட இறைவன் வெளிப் பட்டருளிய அற்புத நிகழ்ச்சி இத்தொடரில் தெளிவாக விரித்துரைக்கப் பெற்றமை காணலாம்.

திருஞானசம்பந்தப்பிள்ளேயாரைக் குறித்து நம்பி யாண்டார் நம்பி பாடிய பிரபந்தங்களிலும் அற்புத நிகழ்ச்சியாகிய இச்செய்தி இடம் பெற்றுளது.